கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் | Pastor Sam Solomon Prabu S D| APA Church

கர்த்தருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று தியானிக்க போகிற பகுதி 

ரோமர் 8:9 

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல

இந்த வேத வசனத்தில் இருந்து மூன்று காரியங்களை சரியான அர்த்தத்தில் தியானிக்க போகிறோம்:

  1. வாசமாயிருந்தால்,
  2. மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல்
  3. ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் 

NIV – (Romans 8:9 You, however, are not in the realm of the flesh but are in the realm of the Spirit, if indeed the Spirit of God lives in you. And if anyone does not have the Spirit of Christ, they do not belong to Christ.)

realm – சாம்ராஜ்ஜியம்

வேதம் சொல்லுகிறது நீங்கள் மாம்சத்தின் ஆளுகைக்கு, ஆட்சிக்கு, சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டவர்களாய் இருந்தால் உங்களுக்குள் அவர் இல்லை அப்படி என்றால் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது பரிசுத்த ஆவிக்குரிய சாம்ராஜ்யத்துக்குள் நீங்கள் வந்து விட வேண்டும். நீங்கள் வாசமாய் (வாழ்தல்) இருக்க வேண்டும்.

வாழ்வது (வாசமாய் இருப்பது) என்றால் என்ன?

வாழ்தல் – living 

எந்த ஒரு பொருள் வாழ்தல் என்று சொல்லுவோம் என்றால் எந்த ஒரு பொருள் வளர்ச்சி அடைகிறதோ எந்த ஒரு பொருள் நகர்கிறதோ எந்த ஒரு பொருள் திரும்ப உருவாக்குகின்றதோ எந்த ஒரு பொருள் சுவாசிக்கிறதோ‌ எந்த ஒரு பொருள் தனக்கான உணவை தானே தேடி எடுக்கிறதோ அதுதான் வாழ்தல்

முதலில் வளரனும்:

ஆவிக்குரிய பிள்ளைகள் ஆவிக்குள்ளாக வளரவேண்டும், வாசமாய் இருத்தல் என்றால் தேவனோடு கூட வாழ்தல் என்று அர்த்தம் (பரிசுத்த ஆவியோடு கூட வாழ்தல் என்று அர்த்தம்) பரிசுத்த ஆவியோடு கூட வாழ்தல் என்றால் பரிசுத்த ஆவியில் நான் வளர வேண்டும்.

உதாரணமாக உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம் குழந்தை பிறந்து அப்படியே இருந்தாள் சந்தோஷப்படுவீர்களா? என்றால் இல்லை எல்லோரும் என்ன ஆசைபடுவீர்கள் குழந்தை பிறக்க வேண்டும், பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும், அப்புறம் திருமணம் செய்து வைக்க வேண்டும், பேரன் பேத்தி பார்க்க வேண்டும் இதுதான் வாழ்க்கை

ஆக வாழ்க்கை என்றால் வளர்ச்சி இருக்க வேண்டும் அப்போ உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கு வளர்ச்சி அவசியம் என்றால் ஏன் ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனுடைய காரியங்களில் நாம் வளர்கிறவர்களாக இருக்க வேண்டும்

நாம் தேவனோடு வாழ்கிறவர்கள் என்று சொல்லுகிறவர்களாய் இருந்தால் நாம் தேவனுக்குள் வளர்கிறோம் என்று அர்த்தம். நீங்கள் தேவனோடு வாழ்கிறவன் / வாழ்கிறவள் என்று சொல்லியும் தேவனுக்குள் வளர்ச்சி இல்லை என்றால் நீங்கள் தேவனுக்குள் வாழவில்லை என்று அர்த்தம். என்னிடம் வளர்ச்சியே இல்லை என்றால் நான் ஆரம்பத்தில் எப்படி ஆலயத்திற்கு வந்தேனோ அப்படியே இருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் இன்னும் தேவனோடு வாழவில்லை அதாவது வாசமாய் இருக்கவில்லை இன்னும் பரிசுத்த ஆவி உங்களோடு கூட வாசம் பண்ணவில்லை

நகருதல்:

அவருக்குள்ளே செயல்பாடுகள் இருக்க வேண்டும் அப்படியே போட்டது போட்ட மாதிரியே இருக்கிறது என்றால் உயிர் இல்லாதது தான் அப்படி இருக்கும் 150ஆம் சங்கீதம் எப்படி சொல்லுகிறது சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக. சில பேர் அசமந்தமாகவும் ஒரு உணர்வில்லாதவர்களாகவும் இருப்பார்கள் அப்படி நீங்கள் இருக்கக்கூடாது உங்கள் ஆவியை பார்க்கிற, உங்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியை பார்க்கிற ஜனங்கள் உங்களைப் போல ஆக்டிவாக அதாவது செயல்படுகிறவர்களாக (active) மாறவேண்டும். முதலாவதாக நாம் வளர்ச்சி அடைய வேண்டும் இரண்டாவதாக எனக்குள் இருக்கிற பரிசுத்தாவி வேலை செய்வதை மற்றவர்கள் பார்க்க வேண்டும். எந்த உயிருள்ள ஜீவனும் ஒரே இடத்தில் சும்மா இருக்காது அதுபோல எனக்குள்ள இருக்கிற பரிசுத்த ஆவி வேலை செய்கிற, அல்லது கிரியை செய்கிற பாத்திரமாக நாம் மாற வேண்டும்.

ஆவிக்குரிய பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும்:

எனக்குள் பரிசுத்தஆவி இருக்கிறது உண்மையானால் எனக்குள் பரிசுத்த சிந்தை இருக்கிறது உண்மையானால் நான் ஆவிக்குரிய பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும். என்ன இது புதுசாக ஆவிக்குரிய பிள்ளை பெற்றெடுப்பது என்று பலர் நினைக்கலாம் அது என்னவென்றால் உலகப் பிரகாரமாக பிள்ளைகளை பெற்று எடுப்பது என்றால் கர்ப்பம் தரித்து அதற்கு உணவு கொடுத்து வளர்ப்பது உலகப்பிரகாரமான ஆனால் பவுல் சொல்லும்போது கர்ப்ப வேதனைபடுவது என்று சொல்லுகிறார் அது ஆவிக்குரிய கர்ப்ப வேதனை நமக்கும் அப்படிப்பட்ட கர்ப்ப வேதனை திரும்ப உருவாக்குகிற ஆத்துமாக்களை ஆதாயம் படுத்துகிற ஆவிக்குரியவர்களாக நாம் மாற வேண்டும் உங்களுக்குள் ஆவியானவர் வாசமாய் இருந்தால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் என்று தெரியுமா மற்றவர்களுக்கு பரிசுத்த ஆவியை குறித்து போதித்து, ஊட்டி விட்டு, வளர்வதை பார்ப்பீர்கள்.

எங்கே நாம் ஒருவரை பார்த்து வயிற்று எரிச்சல் இல்லாமல் இருக்கிறோம் என்று தெரியுமா? நம்முடைய பிள்ளைகளை பார்த்து தான் அது ஏன் தெரியுமா அது நீங்கள் பெற்ற பிள்ளை

நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டும், அந்தப் பிள்ளையை நீங்கள் வளர்க்க வேண்டும், அந்தப் பிள்ளை வளர்வதை நீங்கள் கண்களால் பார்க்க வேண்டும். வாழ்தல் என்பது வாயால் சொல்லிட்டு போவதல்ல நீங்கள் வளர வேண்டும், செயல்பட வேண்டும்ஆண்டவருகாக புதிய ஆத்துமாக்களை ஆதாயம் படுத்தவேண்டும்.

உங்களுக்கான ஆகாரத்தை நீங்கள் உற்பத்தி பண்ண வேண்டும் நீங்க யோசிச்சு பாருங்க மிருகங்கள் என்ன செய்கிறது தனக்கு தேவையான ஆகாரத்தை தானே தேடிக் கொள்கிறது. அதைப்போல நாமும் ஆவிக்குரிய ஆகாரத்தை தேடி, தேடி, தேடி, உட்கொள்பவர்கள் ஆக நாம் மாற வேண்டும். எப்பொழுது பார்த்தாலும் நமக்கு உலகப்பிரகாரமான காரியம்தான் நமக்கு நம்முடைய சிந்தை எப்போது பார்த்தாலும் உலகப்பிரகாரமான காரியம்தான் இந்த மாதிரியான சிந்தனைகளைக் கொண்டு நாம் இருக்கக் கூடாது இப்படிப்பட்ட சிந்தனை உள்ளவர்கள் தேவனுடைய ஆவியை உடையவர்கள் அல்ல உலக ஆசீர்வாதங்கள் வேறு ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் வேறு / வாழ்க்கை என்பது வேறு

நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் பரிசுத்த ஆவிக்குள் நீங்கள் இருக்க வேண்டும் / அடங்கி இருக்க வேண்டும்.‌ இப்படி அடிக்கடி சொல்லுவோமானால்  நம் இருதயத்துக்குள் யார் வாழ்கிறார்கள் என்று கேட்டால் இயேசு வாழ்கிறார் என்று சொல்வோம் ஆனால் வசனம் சொல்கிறதுபரிசுத்த ஆவிக்குள்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நம்மை யாராவது தொட வேண்டுமென்றால் முதலாவதாக உங்களை சுற்றி உள்ள பரிசுத்த ஆவியானவரை தொட வேண்டும் உங்களை தொடுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை அதிகாரமும் இல்லை அப்படி மீறியும் உங்களை தொடுகிறார்கள் என்றால் உங்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்று அர்த்தம் அப்படி இல்லை என்றால் பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தொட அனுமதித்துள்ளார் என்று அர்த்தம்

NLT – But you are not controlled by your sinful nature. You are controlled by the Spirit if you have the Spirit of God living in you. (And remember that those who do not have the Spirit of Christ living in them do not belong to him at all.)

பரிசுத்த ஆவியானவர் தான் நம்மை கட்டுப்படுத்த (கண்ட்ரோல் பண்ண) வேண்டும். பல நேரங்களில் நாம் பரிசுத்த ஆவியானவரை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம், நாம் தான் ஆண்டவரை பரிசுத்த ஆவியானவரை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவருக்கு ஆலோசனை சொல்லும்படி நாம் மாறிவிடுகிறோம் ஆண்டவர் சொல்லுகிற காரியங்களை கேட்பதற்கு நமக்கு நிதானம் இல்லை நாம் இப்படிப்பட்டவர்களாக இருக்கக் கூடாது கர்த்தராகிய இயேசுதான் நம்மை கட்டுப்படுத்த வேண்டும் நாம் அல்ல. சில நேரங்களில் ஜெபம் செய்து சில காரியங்களை நாம் கேட்போம் அது அநியாயமாக கூட இருக்கும் அதைத்தான் நாம் அடம் பிடித்து வீம்பு பண்ணி இதுதான் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்போம். “ஒரு சிறிய கதை தான் ஞாபகம் வருகிறது நாளைக்கு கிடைக்கும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் கடலைக்காய் போதும்ஆனால் ஆண்டவர் உங்களைக் கொண்டு திட்டமிட்டுள்ள காரியங்கள் மிகப்பெரியதாய் இருக்கிறது ஆனால் இன்று கிடைக்கின்ற கடலைக்காய்க்காக நாளை கிடைக்க இருக்கிற பலாக்காயை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

பரிசுத்த ஆவியானவரை எப்படி துக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றால் ஆண்டவரிடம் கேட்கின்ற காரியங்கள் கிடைத்தால் சரி என்றும் நடக்கவில்லை என்றால் ஆண்டவரை நாம் கட்டுப்படுத்தி தேவனை அவமானபடித்திக் கொண்டிருக்கிறோம் ஆண்டவரை நீங்கள் அல்ல அவர்தான் உங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

எத்தனையோ ஆபத்துக்கள் உங்களை நோக்கி வருகிறது போலவே இருக்கும் உங்களைத்தான் பாதிக்கும் என்று கூட நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அது அப்படியே விலகிப் போகும் ஏனென்றால் உங்களைக் கட்டுப்படுத்துபவர் உங்களை கட்டுப்படுத்திக் காப்பாற்றி கொண்டிருக்கிறார்

பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்த ஆரம்பித்தார் ஆனால் அவர் நடத்த நான் அனுமதிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர் உன்னை நடத்துகிற விதத்தை கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால்? எப்படி உன்னை நடத்துவார்? பரிசுத்த ஆவியானவர் உன்னை விட்டு விலகுகிறாரென்றால் பரிசுத்த ஆவியானவர் உன்னை கட்டுப்படுத்த நீ விடவில்லை என்று அர்த்தம்.

டைரக்ட்டிங் அண்ட் கைடிங் யூ (directing and guide you – amp version)

டைரக்ட்டிங்நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக திட்டமிட்டு கொடுப்பதுதான் டைரக்டிங்.

கைடிங்ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் 

சில நேரங்களில் தேவன் உங்களை ஆண்டவருக்கு நேராக திரும்புகிற வேலையை (டைரக்ட்டிங்) செய்து கொண்டிருக்கிறார். உங்களுடைய பார்வை (டைரக்ஷன்) ஆண்டவரை நோக்கி இருக்க வேண்டும் உங்களை இயக்குகிறவருடைய கட்டுப்பாட்டில் நீங்கள்  இருக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு உங்களுடையவராக இருப்பாராக ஆமென்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *