கானான் தேசத்தை உனக்கு தருவேன் | Rev. B.E. Samuel

கிறிஸ்தவுக்குகள் மிகவும் பிரியமான சாரோனின் ரோஜா வாசகர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.


கர்த்தர் கடந்த 2019 வருடம் முழுவதும் 12 மாதங்களும் கண்ணையிமை காப்பதுபோல் காப்பாற்றி சுகம் பெலன் சமாதானம் கிருபை தந்து நடத்திவந்தார். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கடந்த ஆண்டு கொடுத்த வாக்குதத்தின்படி, “நான் உங்களை ஸ்தாபித்து முந்தின சீரை பார்க்கிலும் உங்களை நற்சீர் பொருந்தபண்ணுவேன் என்று சொன்ன வார்த்தையின்படி நம்மோடு இருந்து. நம்மை ஸ்தாபித்து நம்மை வழிநடத்தி நம்மை கரம்பிடித்து காப்பாற்றிக்கொண்டு வந்த அவருக்கே எல்லா மகிமையும் எல்லாக்கணமும் உண்டாகாக ஜெபிக்கிறேன். இந்த புதிய ஆண்டு 2020 மிகவும் ஆசீர்வாதமாய் இருக்க தேவன் உதவி செய்வாராக.


மேலும் “1 நாளாகமம் 16:18 வசனத்திலே உங்கள் சுதந்தர பாகமான கானான் தேசத்தை உனக்கு தருவேன்” பிரியமான தேவ பிள்ளைகளே உங்கள் சுதந்திர பாகமான கானான் தேசத்தை உனக்கு தருவேன் என்று இந்த ஆண்டு நமக்கு வாக்குதத்தம் கொடுத்திருக்கிறார். இதே வசனம் சங்கீதம் 105 பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசனத்தை நாம் இன்று தியானிக்கபோகிறோம். உங்கள் சுதந்தர பாகமான என்ற வார்த்தையை நாம் வாசிக்கும் பொழுது, அதை தேவன் ஏற்கனவே நமக்கு அதை தந்திருக்கிறார் என்று பொருள். ஏற்கனவே தந்த சுதந்திர பாகத்தை ஏன் திரும்பத் தரவேண்டும்? என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். முதலாவது இந்த கானான் தேசத்தை குறித்து நாம் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வோம். ஆதியாகமம் 17:8 நம்முடைய முற்பிதாவும் விசுவாசிகளின் தகப்பனாக விளங்குகிற ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் என்னவென்றால் நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உனக்கு பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தர பாகமாக கொடுத்து, நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்பதே.


நம்முடைய விசுவாசிகளின் தகப்பன் என்று பேர் கொண்ட ஆபிரகாம் அவர்களுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் என்னவென்று சொன்னாள் கானான் தேசத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பது மாத்திரமல்ல உன் சந்ததிக்கு தேவனாயிருப்பேன் என்று சொன்ன. இந்த வார்த்தைக்கு நிகரானது ஒன்றும் இருக்க முடியாது கொடுத்த தேசத்தையே திரும்ப ஏன் கொடுக்க வேண்டும்? நம்முடைய முற்பிதாக்கள் அடிக்கடி தேவனை மறந்து அந்நிய தெய்வங்களை நாடி, விக்கிரக ஆராதனை செய்து, முறுமுறுத்து தேவனை பகைத்து, அருவருப்பான காரியங்களை செய்து கோபம் உண்டாக்கி செய்யவேண்டாம் என்று சொன்ன அனைத்தையும் கட்டாயமாய் செய்து தேவனை விட்டு மட்டுமல்ல கொடுத்த ஆசீர்வாதத்தையும் இழந்து அனாதைகளாய் திக்கற்றவர்களாய் நிற்க இடம் இல்லாதவர்களாய் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கடன் பட்டவர்களாக கஷ்டப்படுகிறவர்களாக வியாதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.


ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? ஏனென்று சொன்னால் ஆபிரகாமுக்கு கொடுத்த ஆசீர்வாதத்தின் படி தேசத்தையும் இழந்தார்கள், தேசத்தை கொடுத்த தேவனையும் மறந்தார்கள் எனவே அவர்கள் பெற்ற தேசத்தை இழந்து நாடோடிகளாக திக்கற்றவர்களாக கஷ்டப்படுகிறவர்களாக நிலையான இடம் இல்லாதவர்களாக அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல அதற்குப்பின் அவர் அடியார்களுக்கும் இந்த வாக்குதத்தம் தொடர்ந்து கொடுக்கப்பட்டுவந்திருக்கிறது.


யாத்திராகமம் 6:4 என்ற வசனத்தில் “பரதேசியாய் தங்கின தேசமாகிய கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன”; என்று யாத்திராகமத்தில் அதை மறுபடியும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தி திரும்ப அவர்களுக்கு கொடுத்தார்.


எண்ணாகமம் 13:2 மோசையோடு தேவன் பேசும்பொழுது நாம் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுக்கும் கானான் தேசத்தை சுற்றி பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு என்று சொல்லி கானான் தேசத்தை திரும்ப அவர்களுக்கு கொடுத்தார். நம்முடைய முற்பிதாக்கள் திரும்பத் திரும்ப பாவம் செய்து தேவனை மறந்து வாக்குத்தத்தத்தை இழந்து தொடர்ந்து தேவனை கோபப்படுத்தி பெற்ற ஆசீர்வாதத்தை இழந்து போனார்கள். ஆண்டவர் இந்நாட்களில் அவரைப் பின்தொடர அவருடைய சீடர்கள் ஆகிய நமக்கு இந்த 2020 ஆம் ஆண்டு திரும்ப அந்தக் கானான் தேசத்தை நமக்கு தருவதாக உனக்கு வாக்குத்தம் கொடுத்திருக்கிறார்.


லூக்கா 19:8 – 10 ஆகிய வசனங்களில் சகேயு என்ற ஒரு பரிசேயன் தேவனை பார்க்க விரும்பி அவர் போகிற வழியில் ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏரி தன்னை ஒளித்துக் கொண்டு தேவனை பார்க்க விரும்பினான் ஆண்டவராகிய இயேசு அத்தமரத்தின் கீழ் வந்து நின்று சகேயுவே சீக்கிரமாய் இறங்கிவா நான் வீட்டில் தங்க வேண்டும் என்று அழைத்தார். அவன் சீக்கிரமாக இறங்கி வந்தான் மக்கள் எல்லோரும் பாவியான மனுஷன் வீட்டில் அவர் தங்கப் போகிறார் என்று முறுமுறுத்தார்கள். அப்போது சகோயு கர்த்தரை நோக்கி ஆண்டவரே என் ஆஸ்த்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன். நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினது உண்டானால் நாளத்தனையாய் திரும்ப செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாய் இருக்கிறானே இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவும்மே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. முன்பு நாம் இழந்ததை எல்லாம் தேவன் திரும்ப நமக்கு கொடுக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார். ஆனால் நாம் செய்யவேண்டிய கடைபிடிக்க வேண்டிய நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது, என்னவென்றால் சகேயுவை போல மக்களால் அங்கீகரிக்கப்படாமல் வெறுப்பப்பட்டு ஒதுக்கப்பட்டு தள்ளப்பட்டு இருக்கிற உன்னை தேவன் இந்த நாளிலே தேடி வந்திருக்கிறார்.


மக்கள் எல்லோரும் உன்னை உதாசீனப் படுத்துவார்கள், பாவி என்று கூட சொல்வார்கள், நிராகரிப்பார்கள், தேவனிடத்தில் வருவதை அவர்கள் விரும்புவதில்லை இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவன் உன்னை தேடி வந்திருக்கிறார். தேடி வந்த இயேசுவை ஏற்றுக்கொண்டு தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட்டது போல நீங்களும் உங்களை ஆராய்ந்து பார்த்து சீர்படுத்தி உங்களை தேவனுக்கு நேராக ஒப்புக்கொடுத்தால், ஆசீர்வதிக்கப்படுவீர்கள் சகேயு நின்று ஆண்டவரை நோக்கி ஆண்டவரே என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினது உண்டானால் நாளத்தனையாய் திரும்ப கொடுக்கிறேன் என்று வேண்டிக்கொண்டான் வேண்டிக்கொண்ட பின்பு ஆண்டவர் அவனைப்பார்த்து இவனும் ஆபிரகாமுக்கு குமாரனை இருக்கிறான் என்று சொன்னார் முதலில் நாம் பார்த்ததுபோல் ஆபிரகாம் என்றால் விசுவாசத்தின் தகப்பன் என்று பொருள் அப்படியானால் சகேயு ஒரு நல்ல விசுவாசியாக மாற்றப்பட்டான் தன்னையும் தன் பாவங்கலையும் அறிக்கை செய்த பின்பு தன் பாவங்களை அறிக்கையிட்ட பின்பு அவன் ஒரு நல்ல விசுவாசி மாற்றப்பட்டான் அதுமாத்திரமல்ல அவன் விசுவாசியாக இருந்து பெற்றுக் கொள்ளக்கூடாத இருந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அவர் வந்து திரும்ப அவனுக்கு கொடுத்தார். இழந்து போனதைத் தேடவும் ரட்சிக்கும் மனுஷ குமாரனாகிய இயேசு உலகத்தில் வந்தார்.

அது மாத்திரமல்ல இஸ்ரவேல் மக்களுக்கு மாத்திரமல்ல இன்றைக்கு அவரை ஆராதித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கும் எனக்கும் ஆக இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் இழந்து போனதை இன்றைக்கு தேவன் உங்களுக்கு கொடுக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார். நீங்கள் என்னவெல்லாம் இழுந்து போனீர்களோ இந்த ஆண்டு திரும்ப தேவன் அவைகளை உங்களுக்கு கொடுக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார். இந்த ஆண்டு வாக்குதத்தம் என்னவென்றால் ”உங்கள் சுதந்திர பாகமான கானான் தேசத்தை உங்களுக்குத் தருவேன்” என்பதே எனவே அவர் தருவேன் என்றதை பெற்றுக்கொள்ள வேண்டும். என்றால் நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் ஜெபத்திலே காத்திருங்கள். நிச்சயமாக தேவன் உங்கள் சுதந்திர பாகமான கானான் தேசத்தை உங்களுக்கு தர வல்லமை உள்ளவராய் இருக்கிறார். கானான் தேசம் ஒரு விசேஷமான தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் குறைவில்லாத ஒரு தேசம் இந்த ஆண்டு உங்கள் எல்லா குறைகளையும் மாற்றி தேவன் நிறைவாக நடத்த வல்லமை உள்ளவராக இருக்கிறார். நம்புங்க விசுவாசிகள் ஜெபியுங்கள் நிச்சயம் தேவன் உங்கள் கானான் தேசத்தை உங்களுக்கு தர அவர் வல்லமை உள்ளவராக இருக்கிறார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *