கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் | Kartharai Nambiyae Jeevipom | Tamil Christian Songs


கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

ஜீவதேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மாசமாதானம் தங்கும்

உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார்

உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்

அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்

நீதிமானின் சிரசின்மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை, நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே

இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை இராஜ்ஜியத்தில்

Online Christian SongBook: கர்த்தரை நம்பியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *