கரங்களை தட்டுவோம் | Karangalai Thattuvom | Tamil Christian Songs | Rev. PJM. Stephen Raj | M.K.Paul


கரங்களை தட்டுவோம்
கர்த்தரையே துதிப்போம்
காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்

இம்மட்டும் காத்தவர் இனியும் காப்பவர்
கடைசி வரைக்கும் கைவிடமாட்டார்
சோர்ந்திடாமல் நாம் பாடிடுவோம்
காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்

ஆபத்து நேரத்தில் அடைக்கலமானவர்
நோயுற்ற நேரத்தில் வைத்தியராவார்
கவலை வேண்டாம் கரம் தட்டுவோம்
காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்

வானத்து பறவையை வயல்வெளி மலர்களை
போஷித்து உடுத்திடும் உன்னத தேவன்
உறங்கிடாமல் உற்சாகம் கொள்வோம்
காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்

online songbook : கரங்களை தட்டுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *