கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் | Pastor B. E. Samuel | APA Church

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. நம்முடைய சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு நாம் தியானிக்க போகிற பகுதி சங்கீதம் 68:6 கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் என்ற தலைப்பில் பார்க்கப் போகிறோம்.

சங்கீதம் 68:5,6.

5. தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.

6. தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.

நமக்கு என்னென்ன கட்டுகள் இருக்கிறது? வியாதி, பெலவீனம், சோர்வு  இவையெல்லாம் ஒரு கட்டு. சோர்வு என்பது அருகில் இருக்கக்கூடிய பொருட்களை கொஞ்சம் கைகளை நீட்டினாள் எடுக்க முடியும் ஆனால் வேறு ஒருவர் அதனை எடுத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே சோர்வு. இதைப்போன்று அநேக காரியங்களில் நாம் கட்டுண்டு இருக்கிறோம்.

விக்ரக பிசாசினாலே கட்டப்பட்டு இருக்கிறோம். இன்றும் அநேகர் விக்ரகங்களை குறித்து பயம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் அது வந்து நம்மை அழித்துவிடும் என்று அநேகர் பயந்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அந்த விக்கிரகம் அந்த இடத்தைவிட்டு கூட அசைவதில்லை அந்த விக்ரகத்தை நீங்கள் எங்கு கொண்டு போய் வைக்கிறீர்களோ அதே இடத்தில் தான் அது இருக்கின்றது. அதற்கு உயிரோ உணர்வோ ஒன்றுமே இல்லை ஆகையால் அதற்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சில பேர் பாவங்களினாலே கட்டுப்பட்டு இருப்பார்கள். விட வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அதை விட முடியவில்லை.

ஒவ்வொரு காரியங்களிலும் நாம் எங்கு கட்டப்பட்டு இருக்கிறோம் முதலாவதாக அதை நாம் கண்டறிய வேண்டும். பாவத்தினால், பலவீனத்தினால், வியாதியினால், பிசாசினால் இப்படி  அநேக விஷயங்களில் நாம் கட்டப்பட்டு இருக்கிறோம்.

rpல நேரம் வறுமையினால் கட்டப்பட்டு இருப்போம். அதிகமாக சம்பாதித்து இருப்போம் ஆனால் வீட்டிலே வறுமை இருக்கும். ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்து இருந்தும் பாதி சம்பாத்தியம் கடனுக்கே சரியாகி விடுகிறது.  சில பேர் பாவங்களினாலே கட்டப்பட்டு இருப்பார்கள். எவ்வளவு தேவனுடைய ஆசீர்வாதம் வந்தாலும் அந்த இடத்தைவிட்டு எழுந்து கூட வரமுடியாது. இவ்விதமாக கட்டப்பட்டு இருக்கிற உங்களை கர்த்தர் விடுவிக்க போகிறார்.

இருளின் அதிகாரத்தினின்று நமக்கு விடுதலை:

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (கொலோசெயர் 1:13)

பிதா ஏன் விடுதலை கொடுக்கிறார்? எங்கிருந்து கொடுக்கிறார்?

1.    இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலை கொடுக்கிறார்

2.    அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுவதற்காக.(உட்பிரவேசிப்பதற்குகாக) பிதாவாகிய தேவன் உங்களை விடுதலையாகிறார்.

உலகம் முழுவதும் அந்தகாரத்தில் இருந்தது. நாம் கூட அந்தகாரத்தில் இருந்தோம், அறியாமையில் இருந்தோம். செங்கல்லை எடுத்து நட்டுவைத்து அதை கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். காரணம் நம்முடைய அறியாமை. இப்படி இருந்த நம்மை பிதாவாகிய தேவன் நம்மேல் அன்பு கூர்ந்து இயேசுவை இவ்வுலகத்தில் அனுப்பி இரட்சிப்பை நமக்கு கொடுத்து அவருடைய அன்பின் ராஜ்யத்திலே நாம் இங்கு ஆளுகை செய்யும் படி, அவரை ஆராதனை செய்யும் படி ஏற்படுத்தின படியால் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்.

இயேசுகிறிஸ்துவினுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறது?

இயேசுகிறிஸ்துவினுடைய ராஜ்யம் நாம் ஆராதிக்கிற இந்த இடத்தில்தான் உள்ளது. அவர் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார், அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார், ஆட்கொள்கிறார், ஆளுகை செய்கிறார். நானும் நீங்களும் சேர்ந்து தேவனை ஆராதித்து கொண்டிருக்கிறோம் ராஜாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், ராஜாவை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறோம், அப்படி ஒவ்வொரு காரியங்களாக நாம் தேவனை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். ஏனென்றால், நாம் அவருடைய ராஜ்யத்திற்கு உட்பட்டு இருக்கிறோம். அவருடைய ராஜ்ஜியத்துக்கு உட்பட்டிருந்த நம்மை பரலோகத்திற்கு அழைத்துச்செல்ல போகிறார்.

நாம் இங்கு ஜெபிக்கும்போது எங்கிருந்து பதில் வருகிறது?

பரலோகத்திலிருந்து நம்முடைய ஜெபத்திற்கு பதில் வருகிறது.

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை:

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36)

முதலாவதாக பிதாவாகிய தேவன் நம்மை விடுதலையாக்கினார்.

இரண்டாவதாக குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினார்

கர்த்தராகிய இயேசு உங்களை விடுதலை ஆக்கினால் நீங்கள் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள். உலகத்தில் யாரும் விடுதலையாக வேண்டிய அவசியம் இல்லவே இல்லை. இன்றைய காலங்களில் அனைவரும் என்ன யோசிக்கிறார்கள் என்றால் எதையோ ஒன்றை பிடித்துக்கொண்டு அதுதான் விடுதலை தருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் பிதாவும் விடுதலையாக்குகிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் விடுதலையாக்குகிறார்.

இவற்றில் பிதா கொடுத்த விடுதலைக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த விடுதலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிதா ஏன் விடுதலை கொடுக்கிறார் என்றால் இயேசுவோடு வாழ்வதற்காக. அதற்கு முன்பாக நாம் அந்தகார இருளில் இருந்தோம். இப்போது வெளிச்சத்தில் இருக்கிறோம். 

கர்த்தராகிய இயேசு கொடுத்த விடுதலை நிரந்தரமான விடுதலை. குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். இரண்டாவதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விடுதலை தருகிறவராக இருவராக இருக்கிறார். இன்று நாம் விடுதலையை எங்கு தேடிக்கொண்டிருக்கிறோம்? யார் கொடுப்பார்கள் என்றால் அநேக பேர் பிதாவையும் இயேசுவையும் பரிசுத்த ஆவியையும் விட்டு விட்டு எங்கெங்கோ சென்று அந்த விடுதலையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை:

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

(2 கொரிந்தியர் 3:17)

ஆவியானவர் வேறு யாருமில்லை கர்த்தரே ஆவியானவர். கர்த்தர் யார் என்றால் அவர் பிதா,  இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி.

பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டியது உங்கள் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று. பரிசுத்த ஆவி பெறாமல் விசுவாசியாக நீங்கள் இருந்தீர்களானால் உங்கள் நிலைமை பரிதவிக்க பட்டதாக இருக்கும்.

அப்போஸ்தலர் 19

பவுல்: நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?

மக்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை

பவுல்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

மக்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்

பவுல்: அப்பொழுது உங்களுக்கு யோவான் சொன்னாரே நான் உங்களுக்கு ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் எனக்குப்பின் ஒருவர் வருகிறார் அவர் ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களை அபிஷேகம் செய்வார் என்று சொன்னார்.

(யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே)

இன்று வரை பரிசுத்த ஆவியை பெற்றிராத நீங்கள் இன்று ஒரு தீர்மானம் செய்யுங்கள் ஆண்டவரே என்னை பரிசுத்த ஆவியினாலே நிரப்பும் என்று கேட்போம். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் பரலோகத்திற்கு போக முடியாது இங்கு வேண்டுமானால் விசுவாசியாக வரலாம், காணிக்கை செலுத்தலாம், ஊழியம் செய்யலாம் ஆனால் பரிசுத்த ஆவி இல்லாமல் பரலோகத்திற்கு போகவே முடியாது.

யோவான் 3

நிக்கொதேமு: நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்

இயேசு: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்

நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ?

இயேசு: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்.

பரலோகம் போக வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஞானஸ்தானம் எவ்வளவு முக்கியமோ அதைப் போன்று பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவ்வளவு அவசியமானது.

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு அப்படி என்றால் இதனுடன் அநேக காரியங்கள் இருக்கின்றது விடுதலை மட்டுமல்ல இன்னும் அனேக காரியங்கள் உண்டு. ஆவியானவர் வந்தால் எல்லாமே நடக்கும். நீ நினைக்கிற நீ பார்க்கிற நீ எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிற காரியங்களெல்லாம் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்தால் எல்லாமே கிடைக்கும். பிதாவை ஏற்றுக்கொண்டது போல இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அதுபோல பரிசுத்த ஆவியையும் உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவி இங்கு வாழ வைப்பது மட்டுமல்ல பரலோகத்திலும் உங்களை கொண்டு செல்ல பரிசுத்த ஆவிக்கு வல்லமை உள்ளது.

விடுதலை இதன் மூலமாக கிடைக்கிறது?

மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.

(அப்போஸ்தலர் 13:39)

விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.

அடுத்தது விசுவாசம் முக்கியம். இப்போது நம் வாழ்க்கையில் பிதா முக்கியம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முக்கியம் பரிசுத்த ஆவியானவர் முக்கியம் அதைப்போல விசுவாசம் நம் வாழ்க்கையில் முக்கியம். ஒரு சிலருக்கு விசுவாசமே இருக்காது ஆனால் அவர்கள் பெயர் விசுவாசி. நம் வாழ்க்கையில் பிரச்சினை வந்தால் உடனே காவல்துறையை சந்திப்பது ஊரிலுள்ள பெரியவர்கள் சந்திப்பது இப்படி இருக்கின்ற நீங்கள் எப்படி விசுவாசிகள் என்று சொல்கிறீர்கள் நான் இயேசுவிடம்  சொல்லுகிறேன் என்பவர்கள்தான் உண்மையான விசுவாசி, எனக்கு கஷ்டமா இருக்கிறது நான் இயேசுவிடம் சென்று சொல்லுகிறேன் நீதான் விசுவாசி ஏன் தெரியுமா உன்னை வேறு யாராலும் விடுதலையாக முடியாது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே உன்னை விடுதலை ஆக்க முடியும், உன் விசுவாசம் உன்னை விடுதலையாக்கும்.

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்:

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

(யோவான் 8:32)

சத்தியம் என்றால் கர்த்தருடைய தேவ வார்த்தை. இந்த வேதம் சொல்லுகிறபடி நீங்கள் நடந்தால் அது உங்களை விடுதலை ஆக்கும் நீங்கள் எதைப் பற்றியும் பயப்படாமல் ரொம்ப நாளாக ஒரு பிரச்சனை தீரவில்லை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை நானும் முயற்சி செய்து முயற்சி செய்து அதை விட்டு விட்டேன் இதைப்போன்று பிரச்சினை இருக்கிறதா நீங்கள் ஒரு மணி நேரம் உட்கார்ந்து வேதத்தை படியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *