உயிர்த்தரே உயிர்த்தரே
உன்னதர் இயேசு உயிர்த்தாரே – 2
சாவினை வென்று உயிர்த்தாரே
சாத்தானை ஜெயித்து உயிர்த்தாரே – 2
1. கல்லறை திறந்திட உயிர்த்தாரே
காவலர் நடுங்கிட உயிர்த்தாரே – 2
நீதிமானாய் நம்மை மாற்ற
நீதியின் தேவன் உயிர்த்தாரே – 2
2. மரித்த இயேசு உயிர்த்தாரே
மரியாள் கண்டிட உயிர்த்தாரே – 2
அகிலமெங்கும் ஓடி சொல்ல
அன்பர் இயேசு உயிர்த்தாரே – 2
3. தேவ மகிமையில் உயிர்த்தாரே
தேவ சாயலில் உயிர்ப்போமே – 2
உயிர்த்த இயேசு திரும்ப வருவார்
உயிரோடு என்றும் ஆளுவோம் – 2