உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே (2) இயேசுவே
கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க
வேறு ஒரு கரம் இல்லையே-2
காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கும்
கர்த்தர் இயேசு கரம் அல்லவா-2
தீராத நோய்களை தீர்திட வல்ல
ஒளஷதம் வேறு இல்லையே-2
உமது இரத்தமே நோய்களை குணமாக்கும்
மாறாத ஒளஷதமே என் இயேசுவே-2
எங்கே ஒடுவேன் யாரிடம் செல்லுவேன்
யார் என்னை ஆதரிப்பார்-2
விசாரித்து காக்கும் போஷித்து நடத்ததும்
கல்வாரி அன்பல்லவோ என் இயேசுவே-2
Online Christian SongBook : உம்மைத் தவிர