உன்னை மேன்மையாக வைப்பார்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இந்த சாரோனின் ரோஜா இதழ் மூலம் உங்களை சந்திப்பதிலும் தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்வதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 2020ஆம் ஆண்டு அநேகர் அநேக விதமான ஆசீர்வாதங்களை கூறினார்கள் எல்லாவற்றுக்கும் எதிராக இருபதாவது ஆண்டு அமைந்துவிட்டது. மார்ச் இருபத்திரண்டாம் தேதி ஆரம்பித்த கொரோன என்கிற கொடிய தொற்று நோயால் இந்திய தேசமே கட்டுண்டு கிடக்கிறது ஏன் உலகம் உலக நாடுகளே கட்டுண்டு கிடக்கிறது. அநேக அநேக தீர்க்கதரிசனங்கள் அநேக பஞ்சாங்கங்கள் நம்பிக்கை எல்லாம் முழுமையாக அற்றுப் போயிற்று நாம் இந்த இரண்டாயிரத்தி 21 ஆம் ஆண்டு எப்படி இருக்குமோ? என்னவாய் முடியுமோ? என்று பலவாறு யோசனைகளும் எண்ணங்களும் மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கும் நடக்கப் போவது எல்லாம் தெரிந்துவிட்டால் நாமெல்லோரும் தேவனை மறந்து விடுவோம். இப்படி இருக்கும்போது அநேகர் தேவனை நினைப்பதில்லை. தேவனோடு இருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் உயர்த்த படுகிறார்கள், மேன்மை படுத்தப்படுகிறார்கள் அதைப் பற்றி தான் இப்பொழுது இந்த ஆண்டு வாக்குத்தமாக நாம் பார்க்கப் போகிறோம்.

உபாகமம் 28:1 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் “உன்னை மேன்மையாக வைப்பார்”என்பதே

        பிரியமான தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் இந்த ஆண்டு மேன்மையான ஆண்டாக அமைய வேண்டிக்கொள்கிறேன். உபாகமம் 28 ஒன்றில் சொல்லப்படுகிற வேத வசனத்தை நன்றாய் கவனிப்போம். ஆனால், அந்த முழு வசனமும் நம்முடைய பெரிய ஜனத்திற்கு நம்முடைய மேன்மைக்கு வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. வசனம் சொல்லுகிறது இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகள் இப்படியெல்லாம் செய்ய நீ கவனமாய் இருக்கும் படிக்க அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவி கொடுப்பாயாக. உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மென்மையாக வைப்பார் உன்னை மேன்மையாக வைக்க வேண்டுமானால்? உனக்கு ஒரு நிபந்தனையும் உனக்கு ஒரு கட்டளையும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனையையும் அந்த கட்டளையையும், நீ சரியாக செய்து முடித்தல் நிச்சயமாக இந்த ஆண்டு உனக்கு மேன்மை வந்து தங்கம் மென்மையாக வைப்பேன் என்று சொன்னது உன்மேல் உன் குடும்பத்தின் மேலும் உன் ஊரின் மேலும் உன் சபையின் மேலும் உன் சொந்த பந்தங்கள் மேலும் நிச்சயமாய் வந்து பலிக்கும் இதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்.

நாம் முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டிய காரியம் என்னவென்றால் அநேகர் இந்த கடைசி வார்த்தை மாத்திரம் பிடித்துக்கொண்டு உன்னை மேன்மையாக வைப்பார் என்று சொன்னீரே என்னை மென்மையாகவையும் ஆண்டவரே என்று கேட்டிருப்போம். அதற்கு முன்பு சொல்லப்பட்ட காரியங்களை நாம் மறந்து விடுகிறோம்; அது என்னவென்றால் இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளை படி எல்லாம் செய்ய நீ கவனமாக இருக்கணும் அது என்னவென்றால் கட்டளைகளை செய்வதற்கு நீ கவனமாய் இருக்கவேண்டும். கர்த்தருடைய கட்டளை என்ன எல்லாம் அவருடைய கட்டளையை இருக்கிறது அவருடைய கட்டளை என்று எடுத்துக் கொள்வது எப்படி இது அவருடைய கட்டளை என்று நான் எப்படி அறிந்து கொள்வது என்று அநேக கேள்விகள் உங்கள் இருதயத்திலே தோன்றலாம் வேதம் நமக்கு தெளிவாய் போதிக்கிறது. கர்த்தருடைய கட்டளையின்படியே கவனமாயிரு வேதத்திலே அநேக கட்டளைகள் விஷயமாக பத்து கட்டளை அல்லது பத்து கற்பனைகள் என்று சொல்வார்கள் இந்த பத்து கட்டளை வேறு யாருக்கும் அல்ல உனக்கும் எனக்கும் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டளையின் படி செய்ய நீ கவனமாய் இருந்தால் நிச்சயம் தேவன் உன்னை மேன்மையாக வைப்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை நிச்சயமாக உன்னை அவர் மென்மையாக வைப்பார் சில நேரத்தில் தேவன் நமக்கு சொப்பனங்கள் மூலமாகவும் தரிசனங்கள் மூலமாகவும் தீர்க்கதரிசி மூலமாகவும் உங்கள் சபை போதகர் மூலமாகவும் ஏன் உங்கள் வீட்டில் உள்ள யாராவது ஒருவர் மூலமாக தேவன் உங்களோடு கூட பேசலாம் கட்டளையிட செய்யலாம். ஏன் பிளயாமுக்கு தேவன் கழுதையைக் கொண்டு பேசினர். இன்றைக்கும் யாரைக் கொண்டு வேணாலும் உன்னோடு கூட பேச வல்லமை உள்ளவராக இருக்கிறார் ஆகையினால், அவசரத்திற்கு அவர் கட்டளைகளை எல்லாம் நீ செய்ய கவனமாய் இருக்கவேண்டும்.

இரண்டாவதாக அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவி கொடுக்க வேண்டும் செவி கொடுக்க வேண்டும் என்று எழுதாமல் உண்மையாய் செவி கொடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. அநேகர் ஆண்டவர் சொல்வதையெல்லாம் கேட்கிறது போல் அவர் சித்தத்தை செய்வதுபோல் பாசாங்கு செய்கிறார்கள். ஆனால், உண்மையாக அவர்கள் கர்த்தருடைய சித்தத்திற்கு அல்லது கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறார்களா? என்பது ஒரு கேள்வியாகத்தான் இருக்கிறது. இன்றைக்கு அநேகர் வெளியே புறப்படும் பொழுது ஆண்டவரே நான் போறேன் என்கூட வாரும் நான் இதை செய்கிறேன். நீங்க கூட இரும் என்று சொல்வதைத்தான் நான் கேட்கிறோமே தவிர தேவனே நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் சொல்லும் என்று யாருமே கேட்பதில்லை. அப்படி என்றால் என்ன அவர் சத்தத்திற்கு நாம் செவி கொடுக்கவில்லை என்பது தானே இங்கே பொருளாய் விளங்குகிறது. அருமையான தேவ பிள்ளையே ஆண்டவரே நான் சொல்லுகிறேன் நீர் கேளும் என்று சொல்லுவதே நிறுத்திவிட்டு ஆண்டவரே நீர் சொல்லும் நான் கேட்கிறேன் என்று சாமுவேலை போல நீங்களும் சொல்லும் ஆண்டவரே அடியேன் கேட்கிறேன் என்று சொல்லுகிறவர்களாக நீங்கள் மாற வேண்டும் அப்பொழுது தானே நீங்கள் உண்மையாக தேவனுடைய சத்தத்திற்கு செவிக்கொடுப்பவர்ககாக இருப்பீர்கள் அப்படி உண்மையாய் நீங்கள் தேவனுடைய சத்தத்திற்கு செவிக்கொடுத்தால் நிச்சயமாக தேவன் உங்களை மேன்மையாக வைப்பார்.

மறுபடியும் சொன்னதையே சொல்லி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் தேவன் உன்னை மேன்மையாக வைக்க வேண்டுமென்றால் அவர் சொல்லுகிற விதிகளையும் கட்டளைகளையும் நீ கட்டாயமாக செய். இந்த ஆண்டு எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எத்தனை கோரங்கள் நேரிட்டாலும் எத்தனை பேர் உனக்கு எதிராய் எழுப்பினாலும் எத்தனை பிசாசின் கிரியைகள் எனக்கு விரோதமாய் எழுப்பினாலும் எத்தனை எதிராளிகள் உனக்கு எது வந்தாலும் நிச்சயமாய் தேவன் உன்னை மேன்மையாக வைப்பார்.

அதற்கு நீ செய்ய வேண்டியது இரண்டு விஷயங்கள்தான் ஒன்று உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படி எல்லாம் செய்ய நீ கவனமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை உண்மையாய் நீ செவி கொடுப்பது உண்மை என்றால் அப்பொழுது யார் தடுத்தாலும் யார் உனக்கு விரோதமாய் வந்தலும் ஏன் இந்த உலகமே தலைகீழாக புரண்டாலும் தேவன் சொன்ன வார்த்தைகள் ஒரு போதும் வாய்க்காமல் போகும் இந்த வார்த்தையின் படி நீ செய்தல் மேன்மை நிச்சயம் உன் தலைமேல் தங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நான் வேத புத்தகத்தில் இருந்து ஒரு சில வசனங்களை உங்களுக்கு மேற்கோள் காட்டலாம் என்று நினைக்கிறேன். அது என்னவென்று சொன்னாள்.

“ஏசாயா 33:10 இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் மேன்மை அடையும்போது நாம் மேன்மை அடைந்து இருக்கிறோம். முதலாவது நீ தேவனை மகிமைப்படுத்த தேவன் உன்னை மகிமைப்படுத்துவார் இயேசு சொன்ன அந்த வார்த்தையை கவனியுங்கள் எழுந்தருளும் உயர்வேன் எப்பொழுது நீ ஆராதிக்கும் போது துதிக்கும் பொழுது ஜெபிக்கும் பொழுது அவரை நோக்கி பார்க்கும் பொழுது அவரை நோக்கி கூப்பிடும் பொழுது அவர் மேன்மை அடைவார் அதனால் நீயும் மேன்மை அடைவார் மேன்மை அடைவதில்லை அல்லது மென்மை படுத்துவதில் நம்முடைய தேவனுக்கு நிகரானவர் ஒருவரும் உலகத்தில் இல்லை தனக்கு சமமாக தனக்கு இணையாக வைத்துப் பார்க்கும் ஒரே தெய்வம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதிலே நீங்கள் கொஞ்சம்கூட ஐயப்பட வேண்டியதே இல்லை.

ஏசாயா 45:25 இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள். என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றால் இஸ்ரவேலின் சந்ததி ஆகிய யாவரும் முதலாவது கர்த்தருக்குள் நீதிமான்கள் ஆக்கப்பட்டு பின்பு மேன்மை படுவார்கள். மேன்மை பாராட்டுவார்கள் நீதிமானாக ஆக்கப்பட வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும் நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார் நீதிமொழிகள் புத்தகம் ஒரு அதிகாரம் முழுக்க நீதிமான்கள் பற்றி மிகவும் அதிகமாக நீதிமானுக்கு என்னென்ன எல்லாம் வரும் என்று சொல்லி மிகவும் அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது அது உங்களுக்கு ஒரு சாட்சியாக விளங்கும். ஏனென்றால், தேவன் எப்பொழுது உன்னை நீதிமானாக மாற்றுகிறாரோ அப்பொழுதே மேன்மை உனக்கு வந்து விடும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை நிச்சயமாக தேவன் உன்னை மேன்மையாக வைப்பார்.

அருமையான தேவ பிள்ளைகளே உங்களுக்கு இன்னும் கூட ஒரு வசனத்தை சொல்லிக் காட்ட விரும்புகிறேன். அது என்னவென்று சொன்னாள்

2 நாளாகமம் 26:18 வது வசனம் நான் அதை வசனத்தை உங்களுக்கு காட்டுகிறேன். ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்; என்று இந்த வேத பகுதி சொல்லுகிறது இரண்டாவது நீங்கள் மென்மையாக இருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த ஆசாரிய, அந்த லேவியர் பணியை சிறப்பாக நீங்கள் செய்கிறவர்களாக மாற வேண்டும். அசாரியப்பணி என்றால் என்ன என்று ஒரு வேளை நீங்கள் யோசிக்கிறீர்களா ஆராதனை ஆலயத்திலே தேவனை ஆராதிப்பது துதிப்பது ஜெபிப்பது அவருக்குரிய காரியங்களை செய்வது கொடுப்பது எல்லாமே ஆராதனையில் ஒவ்வொரு அம்சமாக இருக்கிறது.

இன்னும் கூட ஒரு வசனத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஏசாயா 61:6 ல்; நீங்களோ கர்த்தரின் ஆசாரியர் என்று சொல்லப்படுகிறது உங்களை நமது தேவனுடைய பணிவிடை கடைக்காரர் என்பார்கள் நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அனுபவித்து அவர்கள் மகிமையை கொண்டு மேன்மைபடுவீர்கள். இந்த வசனத்தை நீங்கள் வாசித்தாலே உங்களுக்கு முழுமையாக எல்லாம் விளங்கிவிடும் இங்கே சொல்வதைக் கவனியுங்கள் நீங்களோ கர்த்தரின் ஆசாரியர் நீங்களோ கர்த்தரின் ஆசாரியர் என்று சொல்லப் படுவார்கள்

இரண்டாவது உங்களை தமது தேவனுடைய பணிவிடைகள் என்பார்கள் நீங்கள் தேவனுடைய பணிவிடைகள் என்று சொல்வார்களாம் மூன்றாவது நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அனுபவிப்பீர்கள் அவர்கள் மகிமையைக் கொண்டு நாங்கள் அவர்கள் மகிமையை கொண்டு நீங்கள் மேன்மை பாராட்டுவார்கள் உங்களுக்கு மேன்மை உண்டாகும் ஆகையால் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க விரும்புகிற விஷயம் என்னவென்றால் தூபம் காட்டுகிறது ஆராதனை செய்கிறது துதிக்கிறது தேவனோடு ஐக்கியத்தில் இருப்பது, இப்படி எல்லாமே ஆசாரியனுடைய வேலையை இருக்கிறது. அதனால் தான் இயேசு சொல்லும்போது நீங்கள் ஆசாரியர் குறிய வேலை ஆகிய ஆராதிப்பது ஜெபிப்பது துதிப்பது தேவனுடைய ஆலயத்து வேலைகளையெல்லாம் தம்முடைய சொந்த வேலையாக எடுத்து செய்வது போன்ற காரியங்களை நீங்கள் இன்றைக்கு இந்த ஆண்டு செய்வீர்களானால் தேவன் உங்களுக்கு வாக்கு கொடுத்தது போல இந்த ஆண்டும் எல்லா தொல்லைகளையும் அவமானங்களையும் நிந்தனைகளையும் போராட்டங்களையும் பிரச்சனைகளையும் கொரோன போன்ற கொடிய தோற்று நோய் வந்தாலும் எதிர்ப்பு வந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக தேவன் உங்களை மேன்மையாக வைப்பார.; நீங்கள் இந்த ஆண்டு நிச்சயமாக தேவனால் மேன்மைப்படுத்தப்படுவீர்கள். தேவன் உங்களை மேன்மையாக வைப்பார். ஆமென் அல்லேலுயா.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *