உந்தன் சித்தம் என்னிலே | Unthan Sitham Ennilae | Tamil Christian Song | Rev. G. Thomas Devanandham

உந்தன் சித்தம் என்னிலே
எந்தன் இஷ்டமும் அதுவே
என்றும் உம்முன்பில் நிற்க
(என் கலங்கம் நீக்கிடும்)
நித்திய நாட்களிலே

காரிருள் தாழ்வினிலே
நான் நடந்து செல்கையில் – 2
வசனமாம் வெளிச்சமாய் அருகினில்
நடந்திடும் அற்புதர் இயேசுவன்றோ – 2

வாழ்க்கையின் மேடுகளில் தளர்ந்து
நான் தயங்குகையில் – 2
கைகள் பிடித்தெந்தன் கால்கள்
வழுவிடாதென்னை நடத்திடுமே – 2

நீதியின் வெண் வஸ்திரம்
வாழ்க்கை முடிந்த பின்னே ( ஓட்டம் ) – 2
ஜீவகிரீடமும் நித்திய சந்தோஷமும்
ஏழை யென் ஆறுதலே – 2

கலங்கிடும் வேளையிலே
கண்ணீரின் பாதையிலே – 2
கரம் கொண்டு தூக்கிடும் கரையினில்
சேர்த்திடும் கர்த்தர் நீர் இயேசுவன்றோ- 2

Track :


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *