உங்களுக்குச் சமாதானம் | Pastor B. E. Samuel | APA Church

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இந்த சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்க போகிற பகுதி யோவான் 20 : 19 வது வசனம்.    

“உங்களுக்கு சமாதானம்”

யோவான் 20:19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தவிட்டார். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு இயேசு சில வார்த்தைகள் சொல்லி இருக்கிறார் அவற்றில் ஒன்று உங்களுக்கு சமாதானம். வாரத்தின் முதலாம் நாளில் சாயங்கால வேளையிலே சீஷர்கள் கூடியிருந்தார்கள் கதவு பூட்டப்பட்டிருந்தது ஏனென்றால் யூதருக்கு பயந்ததினால். கதவுகள் பூட்டப்பட்டிருந்தது, பூட்டியிருந்த வீட்டிற்குள் இயேசு கிறிஸ்து வந்து உங்களுக்கு சமாதானம் என்றார்.

மூன்று சம்பவங்களைப் பார்க்க போகிறோம்:

1. வாரத்தின் முதல்நாள் நடந்த சம்பவம்
2. அவர்கள் யூதருக்கு பயந்ததினால் அறையைப் பூட்டி உள்ளே இருந்தார்கள்
3. அவர்கள் நடுவே இயேசு வந்து உங்களுக்கு சமாதானம் என்றார்

இந்த மூன்று காரியங்களைத் தான் பார்க்கப் போகிறோம்.
வாரத்தின் முதல்நாள் நடந்த சம்பவம் :

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே முதலாவது நாம் ஒரு காரியத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று நமக்குத் தெரியும் ஆனால் இயேசுகிறிஸ்து மரித்த அந்த சரீரத்தோடு உயிர்த்தெழுந்தாரா?

நாம் முதலாவது ஒரு காரியத்தை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இப்போது சரீரத்தில் மரித்தவர்கள் உயிர் பெற வேண்டும். 

  அதைப்போல இயேசு கிறிஸ்து மரித்த அதே சரீரத்தோடு உயிர்த்தெழுந்தாரா? இதை நாம் யோசிக்க வேண்டிய காரியம்தான் ஏனென்றால் மரியாவிடம் இயேசு கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று அதற்கு மரியாள் என் ஆண்டவனை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் அதை தெரிந்தால் எனக்கு அறிவியுங்கள் என்று, அதற்கு இயேசு மரியாளே என்றார், மரியாள் ரபூனி என்றால் இதற்கு முன்புவரை இயேசு வந்திருப்பதை அறிந்து கொள்ளவில்லை ஏனென்றால் அவர் உயிர்த்தெழும் போது மாம்ச சரீரத்தில் அல்ல ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார். (பரலோகத்துக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்)

இப்பொழுது இரண்டு சரீரங்களை நாம் பார்க்கிறோம்:
1. மாம்ச சரீரம் (பூமிக்குரிய சரீரம்) மற்றொன்று
2. ஆவிக்குரிய சரீரம்

இயேசு கிறிஸ்து மரிக்கும்போது பூமிக்குரிய சரீரத்தோடு மரித்தார். உயிர்த்தெழுந்த போது பரலோகத்துக்குரிய சரீரத்தோடு உயிர்த்தெழுந்தார். 
இது எப்படி நீ சொல்வதை நான் நம்புவது என்று கேட்டால் வேதத்தில் உள்ளதை தான் நான் உங்களுக்கு சொல்லுகிறேன். 1 கொரிந்தியர் 15 : 40 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது பூமிக்குரிய சரீரம் வேறு, ஆவிக்குரிய சரீரம் வேறு என்று (வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே (1 கொரிந்தியர் 15:40) 

அப்படியானால் நமக்கு இரண்டு சரீரம் உண்டு இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்து பாடுபட்டு மரித்தது உலகத்திற்குரிய சரீரம். அவர் உயிர்த்தெழும் போது பரலோகத்துக்குறிய சரீரத்தோடு உயிர்த்தெழுந்தார். இதிலிருந்து எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது அவர் மாம்சத்தோடும் மரித்தாரே அந்த சரீரம் எங்கே?

இப்பொழுது உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்லுகிறேன் இயேசு கிறிஸ்து வரப்போகிறார் அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிர்த் எழுந்திருப்பார்கள். உயிரோடு இருக்கிற நாம் எல்லாரும் மறுரூபம் ஆக்கப்படுவோம் அப்பொழுது மாம்ச சரீரம் எங்கே?

மாம்ச சரீரமானது மாறி மறுரூபம் ஆக்கப்படுகிறது (பரலோகத்துக்குரிய சரீரமாக மாறுகிறது) அதே போல தான் இயேசுவின் சரீரம் பரலோகத்துக்குரிய சரீரமாக மாறியது. அப்பொழுது தான் மரியாள் இயேசு மரியாளே என்றபோது இயேசுவின் குரலை அறிந்து ரபூனி என்று கூறினாள் அதுவரை அவரை தோட்டக்காரர் என்று எண்ணினாள் ஏனென்றால் அது மகிமையின் சரிரம்.

கவனிக்க வேண்டிய விஷயம் அவர் உயிர்த்தெழுந்த போது சீஷர்களை பார்த்து உங்களுக்கு சமாதானம் என்று சொன்னார். அப்பொழுது அவர்கள் சமாதானம் இல்லாமல் தான் இருக்கிறார்களா? ஆம். இன்று உலகத்தில் அநேக இடங்களில் சமாதானம் இல்லாமல் தான் இருக்கிறார்கள் எதனால் சமாதானம் இல்லை? சீஷர்களுக்கு எதனால் சமாதானம் இல்லை

இயேசு மரித்து விட்டார், யூதர்கள் பயமுறுத்துவார்கள் இயேசுவை கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்வோம் என்று பயமுறுத்துவார்கள்.

அதனால்தான் சீஷர்கள் சமாதானம் இல்லாமல் கலக்கத்தோடு இருக்கிறார்கள். இப்படி சமாதானம் இல்லாமல் இருந்த அவர்கள் நடுவில் இயேசு வந்து நின்று உங்களுக்கு சமாதானம் என்று சொன்னார்.

இதைப் போல நாமும் அநேக காரியங்களில் சமாதானம் இல்லாமல் இருக்கிறோம் இன்றைக்கு நம் வாழ்க்கையில் அநேக பிரச்சினைகள் இருக்கிறது கடன் பிரச்சினை இருக்கிறது, கடன் பிரச்சினையினாலே பயம் இருக்கிறது, கடன் பிரச்சினையினாலே எதிர்ப்புக்கள் இருக்கிறது. இப்படி அநேக காரியங்களில் நாமும் கூட ஒளிந்து கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இப்பொழுது இந்த இடத்தில் நமக்கு சமாதானம் இல்லை இப்படி இருக்கிற உங்களை பார்த்து இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் உங்களுக்கு சமாதானம்.

உங்களுக்கு சமாதானத்தை தரும்படியாக கர்த்தர் உங்கள் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவரைத்தேடி நீங்கள் போகவில்லை அவர் உங்களைத் தேடி இன்று வந்திருக்கிறார். நீங்க பயத்தோடு, கலக்கத்தோடு, வேதனையோடு வீட்டிலிருந்து ஜெபிக்கிறீர்கள் அதற்கு கர்த்தர் செய்த வினை என்னவென்றால் அவர் உங்களை தேடி வந்தார் நீங்கள் அவரைத் தேடி போகவில்லை, அவர் உங்களுக்காக மரித்தார் நீங்கள் அவருக்காக மரிக்கவில்லை, அவர் உங்களுக்காக இரத்தம் சிந்தினார் நீங்கள் அவருக்காக ரத்தம் சிந்தவில்லை எல்லாவற்றையும் கவனித்து பார்த்தால் அவர் தான் உங்களுக்கு செய்திருக்கிறார் நீங்கள் அவருக்கு ஒன்றும் செய்ததில்லை. நீங்க அவரை ஆராதிக்கிறீர்கள் பார்க்கிறீர்கள், துதிக்கிறீர்கள் இதெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள் இதற்கு ஈடாக இயேசுகிறிஸ்து உங்களை தேடி வருகிறார்.

இப்பொழுது இயேசு என்னென்ன காரியங்களில் உங்களுக்கு சமாதானத்தை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்:

ஆதியாகமம் 43:23 அதற்கு அவன்: “உங்களுக்குச் சமாதானம்”; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை அந்நியர் கையில் விற்று போட்டார்கள். யோசேப்பு எகிப்துக்கு அடிமையாக போனான் அந்த காலத்தில் ஆடு மாடுகளை வாங்குவது போல அந்த காலத்தில் மனிதர்களை அடிமைகளாக வாங்கிகொண்டு போவார்கள். உங்களுக்கு தெரிந்த காரியம். 

யோசேப்பு சென்ற இடங்களில் எல்லாம் கர்த்தர் ஆசீர்வதித்தார் பிறகு அந்த நாட்டிற்கு பிரதமராக்கிவிட்டார். அந்த காலத்தில் அதிகமாக பஞ்சம் இருந்ததினால் யோசேப்பின் சகோதரர்கள் எகிப்துக்கு தானியம் வாங்க வந்தார்கள் அப்பொழுது தானியங்களை கொடுத்து அவர்கள் கொடுத்த பணத்தையும் அவர்கள் சாக்குகளில் போட்டு அனுப்புகிறார். யோசேப்பின் சகோதரர்கள் வந்து நாங்கள் கொடுத்த பணம் எங்கள் பைகளில் வந்திருக்கிறது. . 

அதற்கு அவன்: "உங்களுக்குச் சமாதானம்"; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.

நம்முடைய தேவன் எவ்வளவு பெரிய நல்லவர் என்று பாருங்கள் அவருக்கு பஞ்சம் வரும் என்று தெரியும் இஸ்ரவேலர் எகிப்திலே ஆகாரத்தை வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் என்று அவருக்கு தெரியும் அதற்காகவே யோசேப்பை முன்கூட்டியே அனுப்பி அடிமையாய் இருந்த அவனை மீட்டு பிரதமராக அவரை உட்கார வைத்தார். நம்முடைய தேவன் எதை செய்தாலும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்கிறவராகருக்கிறார்.

உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே அவர் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் கர்த்தாவே என் பாவங்களை மன்னியும் என்று வேண்டுதல் செய்தால் போதும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கவராக இருக்கிறார். 

லேவியராகமம் 26:6 “தேசத்தில் சமாதானம்” கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.

தேசத்தில் நான் சமாதானத்தை கட்டளையிடும் போது உங்களை தத்தளிக்க பண்ணுவதற்கு அல்லது குழப்புவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி நீங்கள் வாழ்கிறவர்களாக இருந்தால் கர்த்தர் உங்களை சமாதானத்துக்குள் நடத்தியிருக்கிறார். ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *