இருதயம் | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்தநாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகிற வேதப்பகுதி ரோமர் 10:10

‘நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.’

நாம் இன்று  பார்க்கப் போகிற முக்கியமான ஒரு பகுதி இருதயம். இருதயத்தை குறித்து தான் மேற்கண்ட பத்து வசனங்களில் அதிகமாய் பார்க்கிறோம்.  நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் உலகம் இரண்டாக வகுக்கப்பட்டுள்ளது உலகம் இரண்டு காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  கி.மு கி.பி அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்று  அதேபோல ஒவ்வொரு மனுஷனுக்கும் மூன்று காலங்களாக  நேற்று இன்று நாளை என பிரிக்கப்பட்டுள்ளது.  அது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு சம்பவம். அதுபோல இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக் கொண்டு ஆராதிப்பவர்கள்.

இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்கு பின்பு என நமக்கும் கிமு கிபி என்று உள்ளது. இது நம்முடைய வாழ்க்கையில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.  அதைபோல்  மனுஷனை குறித்து பார்ப்போமேயானால் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளே உடலும் (சரீரம்)  உடலுக்குள்ளே உயிரும் இருக்கிறது. உயிரோடு கூட ஆத்துமாவும் இருக்கிறது இந்த மூன்றுதான் ஒரு மனிதன். உடல் உயிர் இருதயம் இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் இருதயம் இது மிக மிக முக்கியம் வேதம் சொல்லுகிறது இருதயமே கிருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது என்பதாய் வேதத்தில் அநேக இடங்களில் கூறப்பட்டுள்ளது.

இதில் ஆவி ஆத்துமா சரீரத்தில் நம்மை அதிகமாய் ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு பகுதி இருதயமாக உள்ளது. இயேசுவை ஏற்றுக் கொள்ளச்செய்வதும் இருதயம் தான், பாவத்தைச் செய்யத் தூண்டுவதும் அந்த இருதயம் தான், ஒரு சிலர் இறைவனை ஏற்றுக்கொண்ட பிறகு தேவனுக்காக வைராக்கியமாக சாட்சியாக வாழ்வார்கள் ஒரு சிலர் இயேசுவை ஏற்றுக் கொண்ட பிறகும் பழையபடியே வாழ்வார்கள் அவர்கள் இருதயம் திருள்ளதாக உள்ளது. நாம் தெரிந்து கொள்ளவேண்டிய காரியம் என்னவென்றால் மற்றவரது இருதயத்தின் ஆழத்தை நம்மால் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது அது சாதாரண காரியம் அல்ல, ஆனால் நம்மால் நமது இருதயத்தை நன்றாக ஆராய்ந்து பார்க்க முடியும். ஒவ்வொருவரது இருதயத்தையும் அவர்  அவர்களால் நன்றாக ஆராய்ந்து பார்க்க முடியும்.

யார் என்றால் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் உண்மையான தேவனை ஆராதிப்பவர்கள் அதேபோல இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்  ஆனால் ஒரு சிலர் இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அவர்கள் இருதயமோ இயேசுவை ஏற்றுக்கொள்ளாதிருக்கும சிலரை பார்த்தீர்களென்றால் அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் ஆனால் அவர்கள் இருதயம் ஏற்றுக்கொள்ளாது, ஞானஸ்நானம் எடுத்துக்கொள்வார்கள்  ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் காணப்படாது, அவர்கள் தேவனிடம் வந்து விட்டார்கள் ஆனால் அவர்கள் இருதயம் தேவன் அண்டையில் இன்னும் வரவில்லை உதாரணத்திற்கு சிறுவன் ஒருவன் ஆலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தான் சபையில் எல்லோரும் ஜெபித்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த சிறுவனின் ஜெபம் மாத்திரம் வித்தியாசமாக எல்லார் செவிகளிலும் கேட்கப்பட்டது. அது என்னவென்றால் ஆண்டவரே என் அப்பாவிற்கு ஒரு அடி  இறங்கிவாரும் என் அப்பாவுக்கு ஒரு அடி இறங்கி வாரும் என்று ஆண்டவர் ஒரு அடி உயரத்தில் இருக்கிறார் என்பது போலவும் அவன் ஜெபித்துக்கொண்டிருந்தான்.

உடனே அந்த சபை போதகர் அந்த மகனை அழைத்து நீ என்ன ஜெபம் செய்கிறாய்  அவர் என்ன அவர் ஒரு அடி உயரத்திலா இருக்கிறார் என்றார். அதற்கு அந்தப் பையன் தன் தலையில் தட்டி என் அப்பாவுக்கு ஆண்டவர் இங்கேதான் இருக்கிறார் ஆனால் அவர் இருதயத்தில் இன்னும் வரவில்லை.  அதற்காகத்தான் நான் இருதயத்திற்கு ஒரு அடி இறங்கிவாரும் என்று ஜெபித்தேன் என்றான். இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் இது தான் பிரச்சனையாக உள்ளது. அநேகருக்கு இயேசுதான் தெய்வம் அவர்தான் உண்மையான வழி என்றெல்லாம் சொல்வார்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், உண்மை தேவனிடத்தில் இருதய அளவில் ஒப்பு கொடுப்பதில்லை அதுதான் அவரது வாழ்வில் முக்கிய பிரச்சனை அதுவே அவர்கள் வாழ்க்கைக்கு முக்கிய தடையாக இருக்கிறது. நமது வேதம் என்ன சொல்லித்தருகிறது பரிசுத்தத்தை குறித்தும் பரிசுத்தமாய் வாழ்வதைக் குறிக்கும் மற்றவர்களுக்கு முன்பாக உங்களை நல்லவர்களாக வாழவேண்டும் என்று கற்றுத் தருகிறது.

யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று கற்றுக் கொடுக்கிறது ஆனால் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு இருந்த இருதயமோ மற்றவனுக்கு துரோகம் செய்ய தூண்டுகிறது. மேற்கண்ட ஒரு சிறுவனைப் போல வேறொருவர்  சபைக்கு சென்றுள்ளார் அப்பொழுது சபை போதகர் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்தானம் கொடுக்கிறேன் என்று கூறி தண்ணீரில் முழுகும் போது அந்த மனுஷன் உடனே ஒரு கையை மாத்திரம் மேலே உயர்த்தி கொண்டார் உடனே போதகர் நீ இப்படி ஏன் கையை உயர்த்தினாய் தண்ணீரில் மூழ்காதது சரியில்லை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தண்ணீரில் மரித்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுவதற்கு அடையாளமாக நீ முழுவதும் தண்ணீரில் மூழ்க வேண்டும் என்று மறுபடியும் முன் போலவே வார்த்தையை சொல்லி தண்ணீரில் மூழ்கினார் உடனே அவன் முன் போலவே கையை மேலே தூக்கிக்கொண்டான் அதற்கு அந்த ஊழியர் ஏன் திரும்பத் திரும்ப தப்பு செய்கிறாய் நான் உனக்கு முன்னமே சொன்னேனே என்றார்.

அதற்கு அவன் ஐயா அப்படி இல்லை இந்தக் கைக்கு சிறிய வேலை ஒன்றுள்ளது. ஒருவன் என்னை அடித்து விட்டான் அவனை ஒரே ஒரு முறையாவது அறைந்து விட்டு வந்து இந்த கையை நனைத்து கொள்கிறேன் என்றான். அப்படியானால், அவனுடைய இருதயத்தில் பழிவாங்க வேண்டும் என்கிற உணர்வு இன்னும் காணப்படுகிறது. நன்றாய் கவனியுங்கள் பிரியமானவர்களே, ஞானஸ்நானம் என்பது ஒரு அடையாளம் தான் என்னவென்றால் நான் கர்த்தராகிய இயேசுவை நம்புகிறேன் என் சொந்த ரட்சகராக அவரை ஏற்றுக் கொள்கிறேன் அவரை மட்டும் தான் இனி ஆராதனை செய்வேன்.  இதுதான் ஞானஸ்தானத்துக்கு அடையாளமாக ஏற்படுத்த பட்டுள்ளது. அதுபோலதான் மனுஷன் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ஒவ்வொரு மனுஷனுக்கும்  இருதயத்தில் அப்படிப்பட்ட பகையாகயிருப்பதையே வேதத்திலே நாம் பார்க்கிறோம். இப்பொழுது நாம் பார்க்கப் போகிற செய்தி ரட்சிக்க படுவதற்கு முன் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கு முன் ஒவ்வொரு மனுஷனுடைய ஒவ்வொரு சகோதர சகோதரியினுடைய இருதயமும் எப்படிப்பட்டதாயிருக்கிறது

‘எரேமியா 17:9 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?’

‘மத்தேயு 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.’

                இப்போது நீங்கள் உங்களை நிதானித்து சொல்லுங்கள் இந்த வசனங்களின் படி நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களா? இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்களா? அப்படியானால் நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு உங்கள் இருதயம் திருக்குள்ளதும் மிகவும் கேடு உள்ளதுமாய் இருந்தது. இப்பொழுது மேற்கண்ட குணாதிசயங்கள் விலகி தேவ சுபாவத்தினால் மாறியுள்ளீர்கள் மேற்கண்ட வசனத்தின் படி இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னை சேர்ந்து தங்கள் இருதயத்தினால் விலகி இருக்கிறார்கள் ஆகவே வாயின் அளவு மாத்திரமே சேர்ந்திருக்கிறார்கள் இருதயத்தின் அளவு விலகி இருக்கிறார்கள்.

                ஏனென்றால் தேவனைப் பற்றிய பயமில்லை தேவனை நோக்கி ஜெபிக்கிற விண்ணப்பம் இல்லை ஏதோ கட்டாயத்துக்காக ஆலயத்துக்கு வருகிறேன், ஏதோ கடமைக்காக ஆராதிக்கிறேன், இது அல்ல உண்மையான கிறிஸ்தவவாழ்க்கை. உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவர் ஆராதிக்கபடவேண்டும் இதைத்தான் வேதம் சொல்லுகிறது. அப்படியானால் நீங்கள் மனந்திரும்பினவர்களாய் இருப்பீர்களானால் உதட்டின் அளவு அல்ல உங்கள் உள்ளத்திலிருந்து அதாவது இருதயத்திலிருந்து ஆராதனை செய்கிறார்களாய் இருப்பீர்கள், நமது மூளையினுடைய நிலையானது நிமிஷத்திற்கு நிமிஷம் எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் நமது இருதயமோ ஒரு காரியத்தை நிர்ணயித்தால் அதில் சீராக ஸ்திரமாக நிற்க்கும், பரிசுத்தம் பரிசுத்தம் என்று சொல்கிறோமே எது பரிசுத்தம் நமது உடலா அல்லது நமது இருதயமா இருதயத்தில் தான் பரிசுத்தம் தேவை உடலை தண்ணீரில் நனைத்து நன்றாக சோப்பு போட்டு குளித்து விட்டால் சுத்தமாகிவிடும்.

ஆனால் தேவன் எதிர்பார்க்கிற சுத்தம் இதுவல்ல இருதயத்தில் எதிர்பார்க்கிறார் நமது இருதயம் மிகவும் கேடான காரியங்களை சிந்திக்கும் கேடு பாடானதை செய்யும், ஆனால் இந்த இருதயத்தில் இயேசுவை மாத்திரம் ஏற்றுக் கொண்டால் போதும் அந்த இருதயம் முழுவதும் சுத்தமாகிவிடும். பரிசுத்த ஆலயம் ஆகிவிடும் என்னை நீங்கள் பார்க்கிறீர்களே நான் என்ன நினைக்கிறேன் என்று தெரியுமா வெளித்தோற்றத்துக்கு பரிசுத்தமும் நல்லவன் போல காண்கிறேன். ஆனால் என் எண்ணங்கள் உங்களுக்கு தெரியுமா தெரியாது. ஆனால் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு முப்பது வருடங்கள் ஆகிறது ஆனால் இது வரைக்கும் எந்த கேடான சிந்தனை எண்ணங்களும் நினைப்பதில்லை, இனியும் அப்படி எண்ணங்கள் எனக்கு தோன்றாது, என்னிடத்திலிருந்து இயேசுவை யாராலும் பிரிக்க முடியாது. என் மரணம் கூட அதை பிரிக்க முடியாது அப்படியானால் நமது இருதயம் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு எப்படி இருந்தது திருக்குள்ளதும் கேடுள்ளதுமாய் இருந்தது இப்பொழுது இயேசுவுக்கு ஏற்றது போல மாறவேண்டும்.

மாறுபாடுள்ள இருதயம்:

முதலாவது இருதயம் எப்படியிருந்தது திருக்குள்ளதும் கேடுள்ளதாயிருந்தது.

நீதிமொழிகள்12:8 தன் புத்திக்குக்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

மத்தேயு 23:28 அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

                நான் முன்பு சொன்னது போலவே விரும்பாத விருந்தாளியிடம் எப்படி நடந்து கொள்வீர்கள் அவர்களுக்கு முன்பாக நல்லவர்களைப் போல பேசுவார்கள் ஆனால் மனதிலோ அவர்களுக்கு எதிரான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். சிலர் நன்றாக குளித்து செண்ட் அடித்து சபைக்குள்ளே பரிசுத்தவான்களைபோல காண்பிக்கிறார்கள். அதுவல்ல வாழ்க்கை அவர்கள் இருதயத்தை தேவனுக்காக மாற்றபடவேண்டும்.

மாற்கு 7: 20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22. களவுகளும், பொருளாசைகளும், துஷ;டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23.பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நமது இருதயம் எப்படிப்பட்டதாய் இருந்தது தீட்டுள்ள இருதயமாய் இருந்தது தீட்டு என்றால் எதைச் சொல்வார்கள் நீங்கள் எல்லாரும் என்னுடைய சகோதரிகள் ஆகவே இதை நான் சொல்கிறேன் ஒரு பெண் மாதவிடாய் வரும்காலங்களில் அவள் தீட்டாயிருக்கிறாள் அவள் வீட்டுக்கு தூரமாய் இருக்கிறாள் அவள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அவளோ விலகி இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். இது தமிழ்நாட்டு பண்பாடு அந்த மூன்று தினங்களும்  ஓய்ந்திருக்கவேண்டும். இது உலகப் பிரகாரமான தீட்டு. ஆனால் வேதம் கூறும் தீட்டு என்னவென்றால் முக்கியமானதொரு தீட்டு இருக்கிறது அதை தான் இன்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

                மனிதர்களுக்குள்ளிருந்து புறப்படுவது மனிதனை தீட்டுப்படுத்தும். பொல்லாத சிந்தனை எவனை எப்பொழுது அழிப்போம் எவனை எப்பொழுது விழதல்லுவோம் என்று உள்ளத்தில் இருந்து புறப்படும் இருதயத்தில் இருந்து வெளியே வரும் பொல்லாத சிந்தனைகள் இவைகளே நாம் என்ன நினைக்கிறோம் ஏதோ சகோதரிகளை ஒதுக்கி வைப்பது தீட்டு என்று நினைக்கிறோம். ஷஷஒரு சிலர் ஜாதிகளை தீட்டாக சொல்கிறார்கள் அவன் அந்த ஜாதி இவன் இந்த ஜாதி இவன் தாழ்ந்த ஜாதி என்று ஒதுக்கி வைக்கிறார்கள் வேதம் தெளிவாக சொல்கிறது இதுவல்ல தீட்டு.ஷஷ விபச்சாரம் செய்வது தான் தீட்டு நீ வேசித்தனம்பண்ணுவது தான் தீட்டு கொலைபாதகம் ஓர் தீட்டு ஒருவரைக் கத்தியால் குத்துவது மட்டும் கொலை அல்ல கொலைபாதகத்திற்கு காரணமாயிருக்கிறவரும் கொலைபாதகன்தான்  வார்த்தைகளினாலே கொல்லுகிறவர்கள் உண்டு. சொல்லினாலே இருதயத்தை காயப்படுத்துபவர்களும் பெரும் கொலைபாதகரே.

தற்கொலை என்பது ஓர் ஞானமற்ற செயல் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்து முடிப்பதைபற்றியது. வேதம் சொல்கிறது உலகத்திலே உபத்திரவங்கள் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன். நான் தேவனுடைய மகத்துவத்தை மதித்து கீழ்ப்படிந்து தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்வோமென்றால் கர்த்தர் நம்மை விட்டு விலகாமல் அவர் நமக்கு கொடுத்த சகல வாக்குறுதிகளையும் நம்மோடு இருந்து நிறைவேற்றுவார் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *