இயேசு போதுமே இயேசு போதுமே
எனக்கு இயேசு போதுமே- 2
என்னதான் கஷ்டங்கள் எனக்கு
வந்தாலும் என்னோடு இருந்திடுவார்
தொல்லைகள் துன்பங்கள்
என்னை சூழ்ந்த போதும்
துணையாய் வந்திடுவார்,
1. அனாதையாய் அலைந்தேன்
அந்நாளில் ஆதரித்தவர் அவரே இயேசுவே
அன்று செய்த நன்மைகளை
எப்படி நான் மறப்பேன்
2. உதவிடும் நேசர் என்றும் உண்டு
உண்மையாய் நோக்கி பார்த்திடுவேன்
அன்பினால் அவர் என்னை அணைத்திடுவார்
3. உணவின்றி உடையின்றி இருந்தேன்
ஓடி ஓடி திரிந்து நான் அலைந்தேன்
ஏசுவின் கிருபையால் வாழ்கிறேன் இப்போது
Online Christian SongBook: இயேசு போதுமே இயேசு போதுமே