இயேசு எந்தன் வாழ்வின் | Yesu Endhan Vaazhvin | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham


இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம் 2

1. எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார் – 2
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப்பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும் 2

2. பொல்லாத் (பெரும்) தீமைகள் அகன்றோட
எல்லா மாயையும் மறைந்தோட
உமதாவியின் அருட்காண
வருங்காலங்கள் உமதாகும்

3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் வாழ்வேன் உமதாகும்

4. உந்தன் ஊழியம் செய்திடவே
என்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்
உந்தன் சித்தம் என்னில் விளங்க
என்னைப் படைக்கிறேன் உமதாகும்

5. உந்தன் ஜீவனை எனக்களித்து
என்னை ஆசாரியர் ஆக்கினீரே
எந்தன் பொறுப்பதை நிறைவேற்றி
என் ஓட்டத்தை முடித்திடுவேன


Online Christian SongBook : இயேசு எந்தன் வாழ்வின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *