இயேசுவின் இரத்தம் | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இம்மாத இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்கப்போகின்ற வேதப்பகுதி. கொலோசெயர் 1:20

இப்போழுதும் சொல்லப்படுகிற இந்த வேதப்பகுதியில்; இயேசுவின் இரத்தத்தைப்பற்றி நாம் தியானிக்கபோகிறோம்.                

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.  கொலோசெயர் 1:20

வசனத்தை நன்றாக கவனிக்கவும் அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கினார். இந்த மாதம் புனிதவெள்ளி மாதமாக அழைக்கப்படுகிறது. (Good Friday) புனித வெள்ளி என்று சொன்னால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டு மரணமடைந்தநாள் யாருமே சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டநாளை நல்லநாள் என்று சொல்லமாட்டார்கள். ஆனால், இயேசு கிறிஸ்துவை கொலை செய்த நாள் மட்டும் நல்ல நாள் என்று சொல்கிறார்கள் காரணம் என்னவென்று சொன்னால் அவர் கொலை செய்யப்பட்டதினால்தான், நாம் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ஆகையால் இது ஒரு நல்லநாள்.

நாம் வாழ அவர் மரித்தார் ஆகவே அது புனிதநாள் என்று சொல்கிறோம். நாம் நன்றாய் கவனிப்போம் என்றால் அவர் எங்கெல்லாம் இரத்தம் சிந்தினார் என்றால் கெத்சமனே தோட்டத்தில் இரத்தம் சிந்தினார் பிலாத்துவின் மாளிகையிலே இரத்தம் சிந்தினார் வாரினாலே ஒன்று குறைய நாற்பது அடியாக அவரை அடித்தார்கள். வார் எப்படியிருக்குமென்றால் அதின் முனையிலே தூண்டில் முள் போல இரும்பு கொக்கிகள் இருக்கும் அதின் முனையில் இருக்கிற கொக்கிகள் சரீரத்தில் துளைத்து தோலை கிழித்து கொண்டு வரும். வாரினால் அடிக்கப்பட்ட அவருடைய முதுகு எப்படி இருந்ததென்றால் உழுப்பட்ட நிலம் போல இருந்தது. அவர் கெத்சேமனே தோட்டத்தில்  இரத்தம் சிந்தினார் வேர்வையின் துளிகள் ரத்தமாய் வெளிவரக்கூடிய அளவில் அவர் ஜெபம்பண்ணினார்.

 சிலுவையில் அடிக்கப்பட வேண்டியதென்பது தேவனுடைய திட்டம் சட்டம் அவர் எங்கே மரிக்க வேண்டும்? எப்படி மரிக்க வேண்டும்? என்பது வேதத்தில் தெளிவாய் முன்குறிக்கப்பட்டுள்ளது. சிலுவையில்தான் மரிக்க வேண்டும் ஆணிகளால் அறையப்பட்டு மரிக்கவேண்டும் சிலுவையில் தூக்கி அவர் கொலைசெய்யப்படவேண்டும். 

 முதலாவதாக கெத்சமேனே தோட்டத்தில் ஜெபித்துக் கொண்டு இருக்கிறார் அப்படி ஜெபிக்கிறவேளையில் உடலிலிருந்த இரத்தமெல்லாம் வேர்வையாய் வெளிவந்தது. ஒன்றை நாம் நன்றாய் தெரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் ரத்தம் இல்லை என்றால்  மயக்கம் வரும் அதேவேளையில் இரத்தம் அதிகரித்தாலும் மயக்கம் வரும்  அதை இரத்தஅழுத்தமதிகம் என்றும் இரத்தஅழுத்தம்குறைவு என்றும் சொல்வார்கள்.

 நமது உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது என்றால் உடனே மயக்கத்துக்கு போய்விடுவோம் உடனே அவர்களை மருத்துவமனையில் சேர்த்து இரத்தம் ஏற்ற வில்லை என்றால் மரித்துவிடுவார்கள். ஒரு சாலை விபத்து ஏற்படுமானால் உடனடியாக அவர்களைக் கொண்டுபோய் மருத்துவமனையில் இரத்தம் ஏற்றிக் காப்பாற்றுவார்கள் ஆனால் இயேசு கிறிஸ்துவின் கடைசி சொட்டு  இரத்தமும் நமக்காய் சிந்தப்பட்டது இயேசு கிறிஸ்து எங்கே சாகவேண்டும் எங்கே கொல்லப்பட வேண்டும் என்றால் சிலுவையில் தூக்கி  கொல்லபடவேண்டும். ஆனால், பிசாசு என்ன செய்தானென்றால் அவரை கெத்சமனே தோட்டத்திலேயே கொன்றுப்போடலாம் என்று தந்திரமாய் அவருடைய இரத்தத்தின்துளிகளை வியர்வையின் வழியாய் வெளியே கொண்டுவந்தான் அப்பொழுது இரத்தவேர்வை வெளியே வந்தது அப்படி வரும் போது சோர்வு உண்டாகிறது அப்பொழுது அவர்  பிதாவை நோக்கி உம்முடைய சித்தம் இப்படியாக பாடுகள் வழியாக நடத்த வேண்டியதானால் நடத்தும் என்றார். அப்பொழுது பிதாவானவர் தூதனை அனுப்பி இயேசுகிறிஸ்துவை தேற்றவும் பெலப்படுத்தவும் செய்தார்,

 கெத்சமனே தோட்டத்தில் இரத்தம் சிந்தினார் ஆனால் அங்கே அவர் சாகவில்லை. அந்நாட்டின் ஆசாரியன் அண்ணா காய்பா அரண்மனைக்கு  கொண்டு போனார்கள் அரண்மனையில் கொண்டு போய் அவரை அடித்து சித்திரவதை செய்தார்கள் ஒரு இரவெல்லாம் அவரை அடிக்கின்றார்கள் ஏறக்குறைய 300 போர்சேவகர்கள் அவரை அடிக்கின்றார்கள் அதிலே ஒருவன் இயேசுவை ஓங்கி அறைந்து விட்டு உன்னை அடித்தது யார்? என்று சொல் என்கிறான் பலவிதமான உபத்திரவம் பலவிதமான அவமானம் பலவிதமான அடிகள் இரத்தம் ஆறாய் ஓடிக் கொண்டு இருக்கிறது.

 இதைத்தொடர்ந்து பிலாத்து அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறார். அதிகாலையிலே பிலாத்து அரண்மனைக்கு போகிறார்கள் பிலாத்து விசாரிக்கும் போது நான் அவர் மேல் ஒரு குற்றமும் காணவில்லை   இவர் மீது எந்த குற்றம் தெரியவில்லை என்று பிலாத்து தண்டிக்காமல் நீங்களே பார்த்துகொள்ளுங்கள் என்று  வெறொருவரிடம் ஒப்படைக்கிறான்  நன்றாக கவனியுங்கள் ஒருவன் தனக்கு எதிராய் தவறு செய்தால் யாருக்கெதிராய் செய்தானோ அவன்தான் சிட்சிக்கவேண்டும் அவனை மற்றவர்களிடம் கொண்டு போக ஊக்கப்படுத்தக் கூடாது அதே போல இஸ்ரவேல் ஜனங்களாகிய யூதர்கள் தேவ குமாரனாகிய இயேசுவை இவர்களே தீர்ப்பு செய்வதற்கு பதிலாக போர்ச் சேவகர்கள் ராயனிடத்தில் ஒப்படைக்கிறார்கள்.

முதலாவது விசாரிக்கிறவர் ஒரு குற்றமும் காணவில்லை  இவரை வாரினால் அடிபிக்கின்றான். உடலெல்லாம் காயங்கள்  இரத்தம் சிந்தப்படுகிறது நியாயம் விசாரிக்கிறவன் சொல்கிறான் ஒரு குற்றமும் இவரிடம் நான் காணவில்லை தண்டித்து விட்டுவிடலாம் என்று சொல்கிறான். அப்படியிருந்தும் யூதர்கள் விடவில்லை அவரை சிலுவையில் அறையவேண்டும்  சிலுவையில் அறைய வேண்டுமென்று  கூக்குரல் இடுகிறார்கள். இது மூன்றாவது இடம். முதலாவது இடமோ தோட்டம், இரண்டாவது இடம் அண்ணா காய்பா ஆசாரியன் அரண்மனை மற்றும் மூன்றாவது இடம் பிலாத்துவின் அரண்மனை நான்காவதாக இரத்தம் சிந்தினயிடம் கொல்கோதா என்று சொல்லப்பட்ட வீதியிலே கொல்கத்தா என்று சொல்லப்படுகிற இடத்திற்கு புறப்படுகிறார் புறப்படுகிற அரண்மனையில் இருந்து ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள இடம் கபாலஸ்தலம் என்று சொல்லப்படுகிற கொல்கொதாமலை அந்த மலை எப்படி இருக்குமென்றால் மனு~னுடைய மண்டையோட்டைப்போல இருக்கும் ஆகவே தான் அந்த இடத்துக்கு கபாலஸ்தலம் என்று பெயர் அந்த மலை மனு~னுடைய மண்டையோடு போலவே இருக்கும் கபாலம் என்றால் மண்டையோடு  என்று அர்த்தம் அந்த இடத்திற்கு கொண்டுப்போகிறார்கள்.

 இரண்டு கிலோமீட்டர் தூரம் அவரை சிலுவையில் அறையப்போகிற அந்தசிலுவையை அவர் மேல் தூக்கி வைத்தார்கள்   அதின் எடை சுமார் 150 கிலோ அவ்வளவு எடையுள்ள சிலுவைமரத்தை சுமத்தி  கொண்டு போகிறார்கள். 150 கிலோ எடையுள்ள அந்த மரத்தை எடுத்துக் கொண்டு போகவேண்டும் போகிற வழி நெடுக இஸ்ரவேல் ஜனங்கள் அதை பார்க்கிறார்கள். ஒரு சிலர் பார்த்து சிரித்தார்கள் ஒரு சிலர் காரி துப்பினார்கள் ஒரு சிலர் கல்லால் அடித்தார்கள். இது ஏனென்றால் அவர் தேவன் தானே ஏன் அவரை கல்லால் அடித்தார்கள் அவர் தெய்வம்தானே அப்படியென்றால் ஏன் இப்படி நடந்தது என்பது யோசித்துப் பார்த்தால் உண்மை என்னவென்று தெரியுமா அத்தனையும் உனக்காகவும் எனக்காகவும் தான் நாம் நல்வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் .

 இந்நிலையைக் கண்ட  சிலர் சிரித்தார்கள் ஒரு சிலர் காறித் துப்பினார்கள் சிலர் கல்லால் அடித்தார்கள் ஒரு சிலரோ ஓ என்று அழுதார்கள் அவருக்கு அழுகிற ஒரு கூட்டம் இருந்தது இயேசு அந்தக் கல்வாரி சிலுவையை சுமந்து கொண்டு போகும்போது எருசலேமின் ஸ்திரீகள் அவரைப் பார்த்து அழுதார்கள் அந்தப் பெண்களைப் பார்த்து இயேசு சொன்னார் எருசலேமின் குமாரத்திகளே நீங்கள் எனக்காக அழவேண்டாம் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் பச்சைமரமாகிய என்னையே இப்படி செய்தார்கள் என்றால் பட்டமரமான உங்களுக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார், இயேசு இரத்தம் சிந்தன இடம் கொல்கதா மலை கொல்கதா பாதையிலே அவர் சிரிப்புக்கு உள்ளாக்கப்பட்டார். கல்லால் அடிக்கப்பட்டவராய்  பாதையில் கல்லும் முள்ளும் கடந்தவராய் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நமக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு கடந்து கொல்கதா மலைக்கு போய் சேர்ந்தார் அருமையான தேவபிள்ளையே அவரைப் பார்த்து நகைத்து கல்லால் அடித்து ஒரு பக்கம் துன்புறுத்தினார்கள் மறுபக்கம் அவரால் அற்புதம் பெற்ற ஸ்திரீகளோ  அழுதார்கள். எருசலேமின் ஸ்திரீகளே என்றால் பரலோகத்திற்கு உரியவர்களே என்று அர்த்தம் அங்கே அவர்களையும் பார்த்து அங்கே நின்று பரலோகத்துக்குரிய பெண்களே நீங்கள் எனக்காக அழவேண்டாம் உங்களுக்காக உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள்  என்றார்

தேவனோடு நேரத்தை செலவிடுங்கள் உபத்திரவம் வரும்போது ஜெபம்பண்ணுங்கள் க~;டம் வரும்போது ஜெபம்பண்ணுங்கள் தோல்வி வரும்போது ஜெபம்பண்ணுங்கள் மற்றவர்கள்  வார்த்தைகளினால் நம்மை கேவலமாக பேசும் போது ஜெபம்பண்ணுங்கள் சிலுவையில் சிந்தின இரத்தம் ஏன் தெரியுமா உனக்காகதான் உன்னை என்னையும் காப்பாற்றுவதற்க்காகத்தான் ஜெபம் ஒரு பொழுதுபோக்கு என்று நினைக்கிறீர்களா? ஜெபம் ஒரு பொழுதுபோக்கு என்று எண்ணுகிறீர்களா? அதை ஒரு சடங்காச்சாரஜெபமாக செய்துகொண்டு இருப்போமென்றால் அப்படிப்பட்ட ஜெபம் நீ ஜெபிக்க வேண்டாம். 

ஜெபம் தான் உங்களை காப்பாற்றக்கூடியது ஜெபம் உன்னை காப்பாற்றக்கூடியதாய் இருக்கிறது சில பெண்களை  பார்த்து சொன்னார் எனக்காக அழவேண்டாம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளையின் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்க்காக அக்கிரமம் நிறைந்த உலகத்திலே இந்த அவமானம் நிந்தை க~;டத்தை  நீயும் உன் பிள்ளையும் அனுபவிக்கக் கூடாது நீங்கள் நன்றாய் வாழவேண்டும் என்று எனக்காக அல்ல உனக்காகவும் உன் குடும்பத்திற்காகவும் பிள்ளைக்காகவும் அழுங்கள் என்று சொன்னார். இன்றைக்கு அநேகர் ஜெபம் என்று சொன்னால் ஆண்டவரே எனக்கு அதை செய்யும் இதை செய்யும் எனக்கு உதவிசெய்யும் என்று சொல்லி இப்படியே ஜெபிப்பார்கள்.  நன்றாக கவனியுங்கள் பிரியமானவர்களே ஜெபம் என்று அமர்ந்த உடனே  உன் நினைவில் வர வேண்டியது அவருடைய கல்வாரி காட்சிமாத்திரமே மரத்திலே தூக்கப்பட்டவராய் சிலுவையில் அறையப்பட்ட வண்ணமாய் இருக்கிற அந்த இயேசுகிறிஸ்துவை நம் கண்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்ககூடியவர்களாய் காணப்படவேண்டும்.

அப்படிப்பட்ட தரிசனமுடைய யாராயிருந்தாலும் சரி உங்களை அசைக்கவே முடியாது எனக்கு விரோதமாய் யாரோ இதை செய்து விட்டார்கள் மந்திரத்திவாதத்தை  திருப்பித் திருப்பி செய்துகொண்டே இருக்கிறார்கள் எனக்கு சூனியம் பண்ணுகிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை கல்வாரி சிலுவையில் கொஞ்ச நேரம் நின்று பாருங்கள் அவைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாய் போகும் கல்வாரி சிலுவை உற்றுப் பார்க்கும் போது அத்தனை மாந்திரீகமும் எரிந்து சாம்பலாகிவிடும் 

அவர்களை பார்த்துச் சொல்கிறார் இரட்சிக்கப்பட்ட ஜனமே எருசலேமின் குமாரத்திகளே (பரலோகத்துக்குரியவர்களே) என்று  ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடையராஜ்யமாகிய பரலோகத்திற்கு போகமுடியாது என்று இயேசு சொல்லியிருக்கிறார் நாம் பரலோகத்துக்கு உரியவர்களாய் இருந்தால்தான் உண்மையாய் கல்வாரிக் காட்சியைக் காணும்போது அழுகையும் துக்கமும் வரும் ஆரம்பநாட்களில் நான் இந்த ஊருக்கு ஊழியத்திற்கு வந்த துவக்கத்திலே முதல் வருஷத்திலே 1986 ஆம் வருஷம்  கருணாமூர்த்தி என்ற திரைப்படம் வெளிவந்தது அதில் நடித்த ஒருவர் தெலுங்கு பிராமிணநடிகர் அவர் இயேசுவை அறியாத ஒரு நபராக இருந்தார் அவருக்கு ஒரு எண்ணம் வந்தது இயேசு கிறிஸ்துவின்  வாழ்க்கை வரலாற்றை ஒரு படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. அங்கே இருக்கிற சபையின் கிறிஸ்தவ   தலைவர்களையும் போதகர்களையும்  சந்தித்து அவர்களிடத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு எனக்கு வேண்டும் என்று கேட்டார். அவர்களும் கொடுத்தார்கள் அவர்கள் கொடுத்த விவரங்கள் அவருக்கு சரியாக பொருந்தவில்லை ஒரு ஊழியர் இதை கவனித்து அவர் கைகளிலே பரிசுத்த வேதாகமத்தை கொடுத்து இதை நீங்கள் வாசித்தீர்கள் என்றால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், வளர்ப்பும் அவரது ஊழியமும், அவரது  சிலுவைப், பாடுகளும், மரணமும், அவரது உயிர்த்தெழுதலும் தெளிவாய் கொடுக்கப்பட்டுள்ளது. இதை படித்து நீங்கள் திரைப்படத்தை எடுக்கலாம் என்றார்.

அதன் பிறகு அந்த வேதத்தின்படி திரைப்படப்பாடலும் திரைப்படமும்   தயாரிக்கப்பட்டது. கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பிறப்பு முதல்    உயிர்த்தெழுதல் வரை படமாக்கின. அந்த  ஆந்திராவை சேர்ந்த அந்த நடிகரே அந்த படத்தில் இயேசுவாக நடித்தார் கல்வாரி சிலுவையின் பாடுகளை நடிக்கும் போது அவரால் அந்த சிலுவையின் காட்சி வேளையில் நடிக்க முடியவில்லை உடனே சரியென்று  40 நாட்கள் ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிடாமல் உபவாசம் இருந்தார் அவர் இரட்சிக்கப்பட்டவர் அல்ல கிறிஸ்தவரும் அல்ல 40 நாட்கள் உபவாசம் இருந்தார் தன் உடலை ஒடுக்கி இந்த காட்சியை நடிக்க ஆரம்பித்தார் அதற்கு முன்பு அந்த காட்சியில் நடிக்கவோ வெளியிடவோ முடியவில்லை பல தடைகள் வந்தது 40 நாட்கள் உபவாசத்திற்கு பின்பு தான் அந்த காட்சி படமாக்கப்பட்டது. பேப்பரில் வெளியிடப்பட்டது ஆனால் திரைபடம் தியேட்டரில் ஒளிபரப்ப யாரும் முன்வரவில்லை அதன் பிறகு இவரே பணம் செலவழித்து தியேட்டரில் படத்தை ஓட்டினார் முதல் நாள் படம் ஓடியது அமோக வெற்றி அந்த படத்தின் பெயர் கருணாமூர்த்தி அந்த படம் தயாரிக்கும் வரை அந்த நடிகர் இயேசுவை அறியாதவராய்தான் இருந்தார் படம் எடுத்து முடித்து அதை திரையரங்கில் வெளியிடும் வேளையில் தான்  அந்தப் படத்தைப் பார்த்த அந்தநடிகர் உடனே ஓவென்று அழ ஆரம்பித்தார் இயேசுவின் கல்வாரி சிலுவை காட்சியை பார்த்தவுடன் கதறி கதறி அழுது இயேசுவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து இன்றைக்கு அவர் ஒரு பெரிய ஊழியக்காரனாக இருக்கிறார் அவர் அனேகரிடத்தில் பகிர்ந்துகொண்ட சாட்சி அவர் அந்த படத்தை பார்த்த போது அவர் முகம் அதில் தெரியவில்லை அந்த சிலுவை காட்சிகளில் நடித்த அவன் முகம்  தெரியவில்லை மாறாக இயேசு கிறிஸ்துவின் முகம் பிரத்தியேகமாக காணப்பட்டது அந்த காட்சியை பார்த்த உடனே அங்கேயே முழங்கால்படியிட்டு ஜெபித்தார்  தன்னை ஒப்புக்கொடுத்தார் 

தேவனுக்குள் பிரியமானவர்களே இரத்தம் சிந்திய இயேசு உன்னை வாழ வைப்பாரே தவிர உன்னை அழித்து விட மாட்டார் கொல்கத்தாவின் பாதையிலே எருசலேமின் குமாரத்திகளை பார்த்து சொன்னார் பெண்களே நீங்கள் யாரும் எனக்காக அழவேண்டாம் உங்களுக்காக உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள் என்று சொன்னார் அப்படி என்றால் வரும் எதிர்காலத்திலே உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உபத்திரம் வேதனை கஷ்டம் அனைத்தும் வரும் அப்பொழுது நீங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் கல்வாரி சிலுவை நோக்கி நீ ஜெபம் பண்ண வேண்டும் அப்பொழுதுதான் சிறையிருப்பு மாற்றப்படும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவரே உனக்காக இரத்தம் சிந்தியவர் ஐந்தாவது இரத்தம் சிந்திய இடத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் இயேசு காயப்பட்டார் முள்முடி சூட்டப்பட்டார் இரத்தம் சொட்ட சொட்ட சிலுவையிலே தூக்கி அறைந்தார்கள்  இயேசுவானவர் இப்பொழுது சிலுவையில் உருவத்தில் அல்ல அநேகர் சிலுவையை மாடலாக கழுத்தில் அணிந்து கொள்வார்கள் இயேசு சிலுவை சாமி அல்ல அவர் எந்த உருவத்திலும் இல்லை கருணாமூர்த்தியில் இயேசுவாக நடித்தவர் அந்த படத்தில் வருவார் அப்படியானால் உடனே அவரை இறைவன் என்று வணங்க வேண்டுமா இல்லை அதை நன்றாய் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்  போட்டோவில் இருக்கிற எந்த படமும் இயேசுகிறிஸ்து அல்ல இயேசுகிறிஸ்து உயிரோடு மனிதனாக இந்த பூமியில் வந்தது உண்மைதான் ஆனால் அவரது முகம் யாருக்கும் தெரியாது ஆனால் தெரியும் யாருக்கென்றால் உண்மையாய் அவரை தேடுகிற ஒவ்வொருவருக்கும் தெரியும் அவரை தரிசனத்தில் பார்க்கலாம் அவரை ஜெபத்திலே பார்க்கலாம் அவரை ஆராதனையில் பார்க்கலாம் அப்படி தான் பார்க்க முடியுமே தவிர இயேசுவை போட்டோவில் பார்க்கவே முடியாது நம்மை உண்டாக்கின தெய்வம் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை ஆனால் சபைகளிலோ நாம் அனைவரும் உறங்கி தூங்கிக் கொண்டிருக்கிறோம் ஆராதிப்பதை விட்டுவிட்டு சோம்பலாய் இருப்பது அவருக்கு சித்தமல்ல நம்மை உண்டாக்கினவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை அவரை ஆராதிக்கிற நீ தூங்கலாமா? 

இயேசு இரத்தம் சிந்தின  இடம் கல்வாரி சிலுவை கல்வாரி சிலுவையிலே இரண்டு பக்கமும் இரண்டு கைகளை வைத்து 6 அங்குலம் ஆணி வலது கையில் ஒரு ஆணி இடது கையில் ஒரு ஆணி இரண்டு காலையும் சேர்த்து வைத்து ஒரு பெரிய ஆணி வைத்து அடித்து தூக்கி நிறுத்தினார்கள் இரண்டு கைகளில் ஆணி அடிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ஆணி அடித்த இடத்தில் தாங்க முடியாதவலி நேராக வைத்து அடிக்காமல் கால்கள் சிறிது மடங்கிய நிலையில் ஆணிஅடித்துள்ளார்கள்   சமமாக வைக்கப்படவில்லை சரீரத்தின் முழு சுமையும் இரண்டு கைகளின் தோல்பட்டையின்மேல் வந்து நின்றது  இயேசுகிறிஸ்து தனது 33 வயதில் இருந்த எடை ஏறக்குறைய 60-80 கிலோ  இருந்திருப்பார் 6அடி உயரம் சிவந்த மேனி அழகுரூபம் கொண்ட நல்ல அழகான ரூபத்தை உடையவர் அந்த அறுபதிலிருந்து என்பது கிலோ எடையுள்ள ஒருவரது சுமை ரெண்டு தோளில்  வந்து தாங்குகிறது அப்பொழுது முழு சரீரமும் அப்படியே மெதுவாக கீழே இறக்கி தொங்குகிறது கால்களால் உறுதியாக தாங்கிக்கொள்ள முடியவில்லை அந்த சுமையை கால்களிலும் நிறுத்த முடியவில்லை தாங்கொணா வேதனை கீழே முழு எடையும் தொங்கும் போது  இருதயத்துடிப்பு தானாக நின்றுவிடும் எல்லாவற்றையும் நமக்காக சகித்து சிலுவையை ஏற்றுக் கொண்டு நமக்காக மரித்தார் அவர் சிலுவையில் 7 வார்த்தைகள் சொன்னார் அதைத்தான் புனித வெள்ளி அதாவது (good Friday) என்று சொல்கிறோம் அவர் சிலுவையில் சொன்ன வார்த்தை பிதாவே என் ஆவியை உன் கைகளில் ஒப்புக்கொடுக்கிறேன்  கடைசியாக  நம் எல்லாருக்கும் ஆண்டவர் உயிரை பலியாக கொடுத்திருக்கிறார் அதில் இந்துவாகவோ முஸ்லிமாகவோ  கிறிஸ்தவராகவோ இருக்கலாம் ஆக எல்லாருக்காகவும்தான் உயிர் கொடுத்த ஒரேஒரு கடவுள் அவரை அவர்கள் வேறெரு உருவத்தில் பார்க்கிறார்கள்  யார் என்றால் அவர் தான் இயேசு. இயேசு என்ற திரு உருவம் நமக்காக அவர் உயிரைக் கொடுத்தார் 

 அவரது வருகையிலே நம்மையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் யாராவது ஒருவர் ஒரு பொருளை கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என்றால் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் பிறகு வந்து வாங்கிக் கொள்வேன் என்று ஒரு மாதமோ அல்லது ஒரு வாரம் கழித்தோ வந்து வாங்கிக் கொள்வேன் என்று சொல்வார்களானால் நாம் என்ன செய்யவேண்டும் அதை திரும்பபத்திரமாக அதற்குரிய நபரிடம் ஒப்படைக்கவேண்டும் அதுதான் உண்மையான அன்பு அதைப்போலவே நமது உயிரை திரும்ப  அவரிடத்தில் ஒப்படைக்கவேண்டும் இதை யாரிடத்திலும் கொடுக்ககூடாது யாருக்கும் யாருடைய உயிரையும் கொடுக்ககூடாது ஒருசிலர் காதலுக்காக உயிர்கொடுப்பார்கள் ஒருசிலர் படிப்பில் தேர்ச்சி அடையவில்லை என்றால் உயிர்கொடுப்பார்கள் அப்படி ஒருபோதும் செய்யக்கூடாது. இப்போது தோல்வியை சந்தித்தால் அடுத்தமுறை ஏன் ஜெயிக்க முடியாது அதோட வாழ்க்கை முடிந்துவிட்டதா என்ன? புத்தியீனமாக அநேகர் தங்களை மாய்த்துக் கொள்வதை பார்க்கிறோம் அவர்களையெல்லாம் பார்க்கும்போது கேவலமானவர்கள் தோல்விக்காக தற்கொலை செய்துகொள்வார்கள் ஆனால் கர்த்தரோ நாம் வாழ்வதற்க்காகவே அவர் உயிர் கொடுத்தார்  ஆனால் கர்த்தர் கொடுத்த உயிரை கர்த்தருக்காக கொடுப்போம் என்றால் அது நல்லது ஆனால் கர்த்தர் கொடுத்த உயிரை காதலுக்காக கொலை செய்தோம் என்றால் உங்கள் அன்பு கேவலமான அன்பு உனக்கு உயிர் கொடுத்தது யார் கடவுளாகிய இயேசுகிறிஸ்து அந்த உயிரை கொடுத்தவரிடத்தில் தான் நீ திரும்ப கொடுக்க வேண்டுமேதவிர  அப்படிப்பட்ட செயலுக்கு நமது உயிரை கொடுக்ககூடாது என் உயிரை நான் எடுப்பதும் அதுவும் கொலைதான் அது தற்கொலை என்று சொல்வார்கள் அப்படியானால் உயிர் எடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது இயேசு கிறிஸ்து பிதா அருளின அந்த உயிரை பிதாவினிடத்தில் ஒப்படைக்கிறார் அந்த சிலுவையில் இரத்தம் சிந்தி கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும் ஒப்புகொடுத்தார் கடைசி நேரத்தில் மரித்தார்  நூற்றுக்கு அதிபதி  ஒருவன் கல்வாரி சிலுவை அண்டையில் நின்றுகொண்டிருக்கிறான் அப்போது ஈட்டி எடுத்து அவருடைய விலாவிலே ஒரே குத்தாக ஓங்கி குத்தினான்  அப்பொழுது அவரது விலாவிலிருந்து இரத்தம் பீறிட்டு இரத்தமும் தண்ணீரும் வருகிறது அதில் கடைசி சொட்டு இரத்தம்  நிற்கிற நேரத்திலே ரத்தத்தோடு கூட தண்ணீரும் கலந்து வருகிறது அந்த கடைசி சொட்டு இரத்தமும் கூட உனக்காக இயேசு இரத்தம் சிந்தினதை யோசித்துபாருங்கள் இயேசு ஐந்தாவது இரத்தம் சிந்த இடம் சிலுவை அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே முதலாவதாக என்ன உண்டாக்கினார் என்றால் சமாதானத்தை உண்டாக்கினார் சிலுவையில் இரத்தம் சிந்தாவிட்டால் உங்களுக்கு சமாதானம் இருந்திருக்காது அவனவன் எவனை கொல்லலாம் என்று சுற்றி அலைந்து கொண்டிருப்பான் ஆனால் இன்றைக்கு நாம் அமர்ந்து இளைப்பாறி சமாதானமாய் இருக்கிறோமென்றால் அதற்கு முக்கிய காரணம் இயேசு சிந்திய இரத்தமே நமக்கு சமாதானத்தை உண்டாக்கினது 

 இரண்டாவது பரலோகத்தில் உள்ளவைகளும் பூலோகத்தில் உள்ளவைகளும் அவர் மூலமாய் ஒப்புரவாக அவருக்கு பிரியமாயிற்று இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளை பரலோகத்துக்கு உரியவர்களாக இந்த பூமியிலேயே கண்டு அனுபவிக்க செய்கிறார் நம் தேவனுக்கு பரலோகமும் பூலோகமும் ஒன்றுபோலதான் தேவலோகத்தை இந்த பூலோகத்தில் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் வீட்டிலே ஜெபம்செய்கிறீர்களா அப்படியானால் எப்படி ஜெபம்செய்வீர்கள் எப்படி பாட்டுப்பாடி வேதத்தை வாசித்தீர்கள் அதை பரலோகத்திலும் அப்படியே ஜெபிப்போம்  பரலோகத்தில் என்ன நடக்கிறது என்றால் தேவதூதர்கள் இரவும் பகலும் ஓயாமல் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதை நாம் பூமியின் வீட்டில் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடல் மூலமாய் வேத வசனத்தின் மூலமாக ஜெபத்தின் மூலமாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது பரலோகத்தின் தேவன் பூலோகத்தில் வந்து இந்த பூலோகத்தை பரலோகமாக்கிக் கொண்டிருக்கிறார் ஏன் தெரியுமா இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் ஆயிரம் வருஷம் அரசாட்சி செய்யும்படியாக இந்த  பூலோகத்தை அவர் பரலோகமாக்கிக் கொண்டிருக்கிறார் ஏன் எப்படி எப்பொழுது என்ற கேள்வியை கேட்டுப்பார்க்கவேண்டும் ஏன் ஜெபிக்க வேண்டும் ஏன் வேதத்தை வாசிக்கிறோம் என்ற கேள்வி கேட்க வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் துவக்கம் முதல் முடிவு வரை இந்த கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அப்படி கேட்கும் போது நமக்குள்ளே ஒரு பதிலும் வரும் இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் எனக்குள்ளே ஒரு கேள்வி வரும் என்ன கேள்வி என்றால் இரத்தம் எப்படி பாவத்தை கழுவும் இரத்தம் ஒரு வஸ்திரத்தில் பட்டால் அது கறையைதானே உண்டாக்கும் முதலாவது இரத்தகறை வெள்ளுடையில் பட்டால் அது போகவேபோகாது அதை நான் கேள்விபட்டிருக்கின்றேன் இயேசு சிந்திய இரத்தம் பாவத்தை  கழுவும் என்று நான் தேவஊழியர் பேசின செய்தியில் கேள்விபட்டிருந்தேன் ஆனால் எனக்கு இந்த கேள்வி இரத்தம் எப்படி என் பாவத்தை கழுவும் பெரிய கேள்விக்குறியோடு என் மனதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தேன் இதை யாரிடத்தில் போய் கேட்பேன் என்று எனக்கு தெரியவில்லை நான் சிறுவயதாக இருக்கும்போது வீட்டிலே எனக்கு குளித்து பழக்கம் இல்லை அப்பொழுதெல்லாம் கிணற்றில்தான் போய் குளிப்போம் என்னுடைய துணியெல்லாம்துவைத்து விட்டு தான் குளிக்கவேண்டும் அப்போது கிணற்றில் நான் துணிதுவைத்துக் கொண்டிருக்கும் போது நீல வண்ண சோப்பு வெள்ளை கலர் பனியனை எப்படி வெள்ளையாக்கும் என்று கிணற்றுக்கு மேல் இருந்து கேட்பதுபோல தோன்றியது யார் இதைக் கேட்பது என்று மேலே ஏறிப்போய் பார்த்தால் யாருமே இல்லை அப்பொழுதுதான் என் மனதில் ஒரு யோசனை வந்தது ஒரு நீல வண்ணசோப்பு எப்படி ஒரு வெள்ளைக்கலர் பனியனை  துவைக்கும்போது இன்னும் சுத்தமாக்குகிறதோ அதேபோலதான் சிவப்பு நிறைந்த இரத்தம் அழுக்கடைந்த அசுத்தமான இருதயத்தை பரிசுத்தமாக்க வல்லமை உள்ளது என்பதை ஆண்டவர் எனக்கு உணர்த்தினார் ஆகவே இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.

1st  இரத்தம் சிந்தின இடம் கெத்சமனே தோட்டம்.

2nd ஆசாரியரின் அரண்மனைக்கு முன்பு 300 போர் சேவகர்களால் முள்முடிசூட்டப்பட்டு அடித்து இரத்தம்சிந்த செய்துள்ளனர்.

3rd  பிலாத்துவின் அரண்மனைக்கு சென்று வாரினால் அடித்து இரத்தம் சிந்தவைத்தார்கள்.

4th  கல்வாரி பாதையிலே கல்லால் அடித்து இரத்தம் சிந்தவைத்த இடம்.   5th சிலுவையிலே ஆணிகள் அடித்து ஈட்டியினால் விலாவிலே குத்தி இரத்தம் சிந்தவைத்தார்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அது வல்லமையுள்ள தாய் இருக்கிறது இன்றைக்கும் நீங்கள் இயேசு கிறிஸ்துவிடத்திலே விசுவாசம் வைத்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது உண்மையானால் உன் பாவங்கள் அனைத்தையும் அவர் மன்னித்து நித்திய வாழ்வை கொடுத்து உன்னை ஆசீர்வதிப்பதும் உண்மையாகதான் உள்ளது. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *