இந்து மத வேதங்கள் – 2

1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்:

ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ
ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)

ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
(ஏசாயா 7:14, மத்1:18,19,23 )

ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ
பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
(யோ 3:16 )

ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
(மத் 1:8 )

ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ
விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
லூக்கா. 2:21)

ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
(லூக்கா23:33)

ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ
உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
(ஏசா 53:5, சங் 22:16 )

ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ
மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
(1பேதுரு 2:24 )

ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ
பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
(யோ 1:28 )

ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ
தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.

ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ
அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.

ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ
பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.

ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ
எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.

ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ
எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.

ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ
திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.

எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசுவாகிய ஆலயத்தில் வாழுகின்ற கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். (அப் 17: 23 )

ஆலயம் தொழுவது சாலமும் நன்று:

இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *