ஆத்துமாவே ஸ்தோத்தரி | Athumave Sthothari | Tamil Christian Songs | Emil Jebasingh Ayya


கண்ணே முத்தே மணியே அமுதே
கர்த்தர் இயேசுவின் அன்பின் வடிவே (2)

அன்பும் அருளும் ஆற்றலும் அறிவும்
ஆண்டவர் அளித்திடுவார் – இயேசு
ஆண்டவர் அளித்திடுவார்

1. உன்னையும் பெறவே உன் தாய் செய்தால்
பொருத்தனை ஒன்றினையே
ஆண்டவர் கேட்டார் அருளதைக் கொடுத்தார்
உன்னையும் ஈன்றிடவே – உன்
தாய் உன்னையும் ஈன்றிடவே

2. பண்பாய் உன்னை வளர்த்திட கிருபைப்
பனிப்போல் பொழிந்திடுதே
அன்பும் அருளும் வடிவும் மொழியும்
ஆண்டவர் அளித்திடுவார் – இயேசு
ஆண்டவர் அளித்திடுவார்

3. பார்த்தேன் பார்த்தேன் பலநாள் பார்த்தேன்
பாசத்தை கூட்டி வைத்தேன்
இந்திர நீலம் சந்திர காந்தம் மரகதமே மணியே
வாழ்த்துக்கிறேன் கண்னே – நீ
வாழ்ந்திடுவாய் வளமாய்

Online Christian SongBook கண்ணே முத்தே மணியே அமுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *