அல்லேலுயா நான் பாடி மகிழ்வேன் அல்லல்கள் யாவும் அகன்றிடுமே – 2 தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே துயரங்கள் யாவும் மறைந்திடுமே – 2 சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம் சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே – 2 வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம் உடன் நானும் வாழ்ந்திடுவேன் – 2 காரிருள் பாதையை மூடிடும் போது கலங்கிடேன் என்றும் இயேசு என்னோடு – 2 கண்டிடுவார் ஒளி தந்திடுவார் கர்த்தர் உடன் நானும் நடந்திடுவேன் – 2 அலைகள் என் படகை அமிழ்ர்த்திடும் வேளை அஞ்சிடேன் என்றும் இயேசு என்னோடு – 2 அதட்டிடுவார் அதை அமர்த்திடுவார் அக்கரையை நானும் அடைந்திடுவேன் – 2