அப்பா பிதாவே யேகோவா தேவா உம் தயை இருந்தாலே என் வாழ்வில் இன்பம்-2 1. பலத்த கரத்தால் விடுவிப்பேன் என்று வல்லவர் வாக்கு பகிர்ந்தீர் ஐயா-2 என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா-2 2. யேகோவா யீரே என் தெய்வம் நீரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே-2 என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா-2 3. யேகோவா நிசி என்னையும் நேசி சத்துருவின் தெல்லை இனிமேல் எனக்கில்லை-2 என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா-2 4. எபிநேசர் இயேசு என் வாழ்வை பார்த்து இம்மட்டும் உதவி செய்தீரே காத்து-2 என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா-2 5. யோகாவா ஷாலோம் சமாதான தேவன் சமாதானம் எனக்கு அளித்த மெய் தேவன்-2 என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா-2
online songbok : அப்பா பிதாவே யேகோவா தேவா
karaoke : https://youtu.be/uKuqjARdXoc