அநாதி தேவனே சரணம்
ஆதி அந்தமே சரணம்
1. இரட்சண்யக் கொம்பே சரணம்
ஈகையின் வடிவே சரணம்
2. உலகின் ஒளியே சரணம்
ஊற்றுண்ட தைலமே சரணம்
3. ஒன்றான மெய்பொருளே சரணம்
ஓங்கிய புயமே சரணம்
4. ஓளஷ தமானவரே சரணம்
இவ்வனைத்தையும் படைத்தவா சரணம்
5. நித்திய தேவனே சரணம்
சத்திய இராஜனே சரணம்
6. நீதியின் தேவனே சரணம்
வெற்றியின் வேந்தனே சரணம்
7. எந்தையை இயேசுவே சரணம்
ஏகமாய் அமைந்தவா சரணம்
8. ஐங்காயம் அடைந்தவா சரணம்
ஐந்தையும் வென்றவா சரணம்
Online Christian SongBook : அநாதி தேவனே