அகியா (Ahijah)

அகியா யேகோவா சகோதரன்.

1. சீலோனியனான ஒரு தீர்க்கதரிசி. இவன் காலம் கி.மு.980. இவன் யெரோபெயாமைச் சந்தித்து, தன் சால்வையைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, பத்து துண்டுகளாக அவனுக்குக் கொடுத்து, சாலமோனின் இராஐ;யத்தில் பத்து கோத்திரங்களை உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (1.இராஜா.11:29-39). சில காலத்துக்குப் பின் இந்த தீர்க்கதரிசினம் நிறைவேறிற்று. ஆனால் யெரொபெயாம் ஐனங்களை விக்கிரக ஆராதனைக்குட்படுத்தினதினிமித்தம், அவனையும் அவன் சந்ததியையும் கர்த்தர் அழித்துப்போடுவாரென்று அகியா சொன்னான் (1.இராஜா.14:6-16).

2. ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த அகிதூபின் குமாரனாகிய அகியா (1.சாமு.14:3). ஏபோத்தைத் தரித்தவன் அகிமெலேக் என்று 1.சாமு.22.9ல் குறித்துள்ளது.

3. பெலோனியனாகிய அகியா. இவன் தாவீதின் 30 பராக்கிரமசாலிகளில் ஒருவன் (1.நாளா.11.36).

4. தாவீதின் நாட்களில் லேவியரில் ஒருவனாகிய அகியா பொக்கிஷ விசாரணைக்காரனாயிருந்தான் (1.நாள.26:20).

5. சாலமோனுக்கு சீசாவின் குமாரனாகிய அகியா சம்பிரதியாயிருந்தான் (1.இராஜா.4:3)

6. இஸ்ரவேலின் இராஜாவாகிய பாஷாவின் தகப்பன் (1.இராஜா.15:27).

7. நெகேமியாவின் நாட்களில் உடன்படிக்கைக்கு முத்திரை போட்டவர்களில் ஒருவன் (நெகே.10:26).

8. யெர்மெயேலின் குமாரனும், ராம், பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா என்பவர்களின் சகோதரனுமானவன் (1.நாளா.2:25).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *