அகிமாஸ் (Ahimaaz)
(கோபத்தின் சகோதரன்)
1. சாதேக்கின் குமாரன். வேகமாய் ஓடுகிறவனென்று பேர் பெற்றவன். அப்சலோம் கலகம் செய்த நாட்களில் இவனும் அபியத்தார் மகன் யோனத்தானும், தாவீதுக்கு உதவி செய்தார்கள் (2.சாமு.15:27,36).
அப்சலோம் தோல்வியடைந்த செய்தியை இவன் தாவீதுக்கு முதன்முதல் கொண்டுவந்தான் (2.சாமு.18:19-32).
2. நப்தலியிலிருந்த சாலோமோனின் விசாரிப்புக்காரன். சாலோமோனின் குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான் (1.இராஐh.4:15).
3. சவுலுடைய மனைவியாகிய அகினோவாம் அகிமாசின் குமாரத்தி (1.சாமு.14:50).