அகித்தோப்பேல் (Ahithophel)

அகித்தோப்பேல் (மதிகெட்ட சகோதரன்)

இவன் கீலோவு ஊரான். தாவீதுடைய விஷேட ஆலோசனைக்காரன் (2.சாமு.15:12, 16:23).

அப்சலோம், தாவீதுக்கு விரோதமாகக் கலகம் செய்தபோது, அகித்தோப்பேலும் அவனைச் சேர்ந்துகொண்டானென்று தாவீது அறிந்தபோது, கர்த்தாவே அவனுடைய ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான் (2.சாமு.15:31).

அகித்தோப்பேலின் யோசனைப்படி, அப்சலோம் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடம் பிரவேசித்தான் (2.சாமு.16:22).

மேலும் அவன் சொன்ன ஆலோசனையை, அப்சலோம் கேளாமல் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனையைக் கேட்டதினால், தன் யோசனையின்படி நடக்கவில்லையென்று அகித்தோப்பேல் கண்டபோது, தன் வீட்டுக்குப்போய் நான்றுகொண்டு செத்தான் (2.சாமு.15:31-34, 2.சாமு.17:23). ஆகவே அவனைப் பழைய ஏற்பாட்டின் யூதாஸ்காரியோத்து என்றும் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *