அகாஸ்வேரு (Ahasuerus)

அகாஸ்வேரு (Ahasuerus) (வல்லவன்)

1. மேதிய குலத்தானாகிய தரியுவின் பிதா (தானி.9:1).

2. ஒரு பெர்சிய இராஜா. இவன் வஸ்தியை தன்னுடைய இராணியாக இராதபடி தள்ளிப்போட்டு, அழகான யூத பெண்ணாகிய எஸ்தரை விவாகம் செய்தான் (எஸ்.2:17). இந்த அகாஸ்வேரு கிரேக்கரால் சஸ்டா எனப்பட்டான்.

இவன் கோரேஸ் என்பவனின் பேரன். கி.மு. 486ல் இராஐhவானான். பிற்பாடு கி.மு. 480ல் சலாமிஸில் (Salamis) நடந்த யுத்தத்திலும் அடுத்த வருஷம் பிலாத்தியாவில் நடத்த யுத்தத்திலும் தோல்வியடைந்தான்.

3. பெர்சிய இராஜா. கி.மு. 529-521. இவனுக்கு ஆலயம் கட்டுகிறதற்கு விரோதமாக யூதாவின் சத்துருக்கள் பிரியாது எழுதினார்கள் (எஸ்.4:6).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *